சூப்பர் மரியோ வேர்ல்ட்
1990 நிகழ்பட விளையாட்டு / From Wikipedia, the free encyclopedia
சூப்பர் மரியோ வேர்ல்ட் (Super Mario World) என்பது 1990 ஆம் ஆண்டின் பக்க-திரை உருளல் இயங்குதள விளையாட்டு ஆகும். இது நிண்டெண்டோவால் சூப்பர் நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் (எஸ்என்இஎஸ்) க்காக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
மரியோ விளையாட்டு தொடரின் எதிரியான பவுசர் மற்றும் நண்பர்களிடம் இருந்து இளவரசி டோட்ஸ்டூல் மற்றும் டைனோசர் லேண்டை காப்பாற்ற மரியோவின் தேடலின் கதையே இந்த விளையாட்டு ஆகும். முந்தைய சூப்பர் மரியோ நிகழ்பட விளையாட்டுக்களை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.