சுழலி மின்னாக்கி
ஒரு விசையாழியும் மின்னாக்கியும் நேரடியாக இணைக்கப்பட்ட ஒர் அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
சுழலி மின்னாக்கி (Turbo generator) என்பது மின்சார உற்பத்திக்காக ஒரு விசையாழியும் மின்னாக்கியும் நேரடியாக இணைக்கப்பட்ட ஒர் அமைப்பாகும். நீராவியால் இயங்கும் பெரிய சுழலி மின்னாக்கிகள் உலகின் மின்சாரத் தேவையில் பெரும்பான்மையை வழங்குகின்றன. நீராவியால் இயங்கும் சுழலி-மின் கப்பல்களாலும் இவை பயன்படுத்தப்படுகின்றன [1].
வாயு விசையாழிகளுடன் கூடிய சிறிய சுழலி-மின்னாக்கிகள் பெரும்பாலும் துணை மின் அலகுகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் மின்னாக்கிகள் வழக்கமாக சிறந்த எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன, ஆனால், மறுபுறத்தில், டீசல் மின்னாக்கிகள் குறைவான சக்தி அடர்த்தியைப் பெற்றிருப்பதால் இவற்றுக்கு கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
பெரிய வாயு விசையாழி மின்னாக்கிகளின் செயல்திறனை ஒர் ஒருங்கிணைந்த சுழற்சியைப் பயன்படுத்தி அதிகப்படுத்தப்படலாம், இத்திட்டத்தில் சூடான வெளியேற்ற வாயுக்கள் மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்க நீராவியை உருவாக்குகின்றன. இந்நீராவி மற்றொரு சுழலி மின்னாக்கியை இயக்கப் பயன்படுகிறது.