சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம்
மலேசியா, திராங்கானு மாநிலத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
மலேசியா, திராங்கானு மாநிலத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் From Wikipedia, the free encyclopedia
சுல்தான் மாமுட் வானூர்தி நிலையம் அல்லது கோலா திராங்கானு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: TGG, ஐசிஏஓ: WMKN); (ஆங்கிலம்: Sultan Mahmud Airport அல்லது Kuala Terengganu Airport; மலாய்: Lapangan Terbang Sultan Mahmud) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், கோலா நெருஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.[1][2]
வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
உரிமையாளர் | மலேசிய வானூர்தி நிலையங்கள் நிறுவனம் | ||||||||||
இயக்குனர் | மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம் Malaysia Airports Holdings Berhad | ||||||||||
சேவை புரிவது | கோலா திராங்கானு, மலேசியா | ||||||||||
அமைவிடம் | கோலா நெருஸ், திராங்கானு, மலேசியா | ||||||||||
நேர வலயம் | மலேசிய நேரம் (ஒ.ச.நே + 08:00) | ||||||||||
உயரம் AMSL | 21 ft / 6 m | ||||||||||
ஆள்கூறுகள் | 05°22′53″N 103°06′17″E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
புள்ளிவிவரங்கள் (2018) | |||||||||||
|
இந்த வானூர்தி நிலையம், கோலா திராங்கானு மாநகர் மக்களுக்கும்; திராங்கானு மாநில மக்களுக்கும்; கிளாந்தான் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள மக்களுக்கும் வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
1979-ஆம் ஆண்டில் இருந்து 1998-ஆம் ஆண்டு வரை திராங்கானு மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் மகமூத் அல்-முக்தாபி பில்லா ஷாவின் (Sultan Mahmud Al-Muktafi Billah Shah) நினைவாக இந்த விமான நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.
2008-ஆம் ஆண்டில், சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தை மேம்படுத்த மலேசிய அரசாங்கம் 200 மில்லியன் ரிங்கிட் வழங்கியது. ஓடுபாதையை நீட்டிக்கவும், வானூர்தி நிலையத்தின் முனையத்தை மேம்படுத்தவும் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது.[3]
ஒவ்வோர் ஆண்டும் 2 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் இந்த வானூர்தி நிலையத்த்தின் முனையம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா மற்றும் மதீனா வழியாக மக்காவிற்கு பயணிகளை கொண்டு செல்ல மலேசியா எயர்லைன்சு நிறுவனம் தாபோங் அஜி (Tabung Haji) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
2008 அக்டோபர் 11-ஆம் தேதி, மலேசியா எயர்லைன்சு நிறுவனத்தின் மிகப் பெரிய போயிங் 747-400 ரக வானூர்தி (Boeing 747-400) அங்கு தரையிறங்கியது. பெரிய ரக வானூர்திகள் சுல்தான் மாமுட் வானூர்தி நிலையத்தில் தரை இறங்க முடியும் என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சான்றாக அமைந்தது.
சேவைகள் | சேரிடங்கள் |
---|---|
ஏர்ஏசியா | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்); கோத்தா கினாபாலு |
பயர்பிளை | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்) |
மலேசியா எயர்லைன்சு | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிப்பாங்) |
மலின்டோ ஏர் | சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா வானூர்தி நிலையம் (கோலாலம்பூர்–சுபாங்) |
ஆண்டு | பயணிகள் வருகை |
பயணிகள் % மாற்றம் |
சரக்கு (டன்கள்) |
சரக்கு % மாற்றம் |
வானூர்தி நகர்வுகள் |
வானூர்தி % மாற்றம் |
---|---|---|---|---|---|---|
2003 | 394,240 | 160 | 5,508 | |||
2004 | 435,620 | 10.5 | 124 | ▼22.5 | 5,834 | 5.9 |
2005 | 419,475 | ▼3.7 | 94 | ▼24.2 | 5,622 | ▼ 3.6 |
2006 | 398,252 | ▼5.1 | 70 | ▼25.5 | 3,792 | ▼ 32.5 |
2007 | 430,800 | 8.2 | 47 | ▼32.8 | 8,781 | 131.6 |
2008 | 487,495 | 13.2 | 24 | ▼49.0 | 10,045 | 14.4 |
2009 | 523,619 | 7.4 | 24 | 9,875 | ▼ 1.7 | |
2010 | 520,611 | ▼0.6 | 50 | 108.3 | 10,959 | 11.0 |
2011 | 502,966 | ▼3.4 | 103 | 106.0 | 14,296 | 30.4 |
2012 | 550,831 | 9.5 | 147 | 42.7 | 12,809 | ▼ 10.4 |
2013 | 699,310 | 27.0 | 103 | ▼29.7 | 11,402 | ▼ 11.0 |
2014 | 842,651 | 20.5 | 148 | 43.8 | 14,057 | 23.3 |
2015 | 857,239 | 1.7 | 329 | 121.9 | 12,587 | ▼ 10.5 |
2016 | 900,218 | 5.0 | 253 | ▼ 23.1 | 12,066 | ▼ 4.1 |
2017 | 943,660 | 4.8 | 247 | ▼ 2.4 | 11,485 | ▼ 4.8 |
2018 | 894,737 | ▼ 5.2 | 363 | 47.1 | 10,637 | ▼ 7.4 |
2019 | 913,829 | 2.1 | 427 | 47.1 | 11,072 | 4.1 |
2020 | 302,280 | ▼ 66.9 | 173 | ▼ 59.4 | 5,519 | ▼ 50.2 |
சான்று: மலேசிய வானவூர்தி நிலையங்கள் நிறுவனம்[4] |
தரவரிசை | இலக்குகள் | பயணங்கள் (வாரம்) | வானூர்தி நிறுவனங்கள் |
Note |
---|---|---|---|---|
1 | கோலாலம்பூர்–சுபாங் சிலாங்கூர் |
33 | FY, OD | |
2 | கோலாலம்பூர்–சிப்பாங் கோலாலம்பூர் |
26 | AK, MH | |
3 | கோத்தா கினபாலு, சபா | 2 | AK | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.