சும்மார் பகூர்
From Wikipedia, the free encyclopedia
சும்மார் பகூர் அல்லது சுமார் பாகூர் (Chumar Bakhoor or Chumar Bakur) என்பது இரத்தினம் என்றழைக்கப்படும் மணிக்கல் நிறைந்த ஒரு சுரங்கப் பகுதியாகும். பாக்கித்தானின் கில்கித்-பால்டிசுதான் எனப்படும் வடக்கு நிலங்கள் பகுதியிலுள்ள நகர் மாவட்டத்தின் சுமயர் பள்ளத்தாக்கில் 5,520 மீட்டர் உயரத்தில் இச்சுரங்கம் அமைந்துள்ளது. [1] புவியியல் ரீதியாக ஓயும்-நகர் உடன் இப்பகுதி நெருக்கமான தொடர்பிலுள்ளது. மத்திய சுமயரில் இருந்து நடந்து செல்கையில் 4000 மீட்டர் உயரத்திலுள்ள தீப்பாறைகளை அடைய சுமார் 4 முதல் 5 மணி நேரம் பிடிக்கிறது.
Chumar Bakhoor | |
---|---|
சுமர் பாகூர் | |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | சும்மர் பகூர் Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
அமைவிடம் | சுமயர் சமவெளி, பாக்கித்தான் |
சும்மார் பகூரில் உள்ள இரத்தின வைப்புக்கள் 1984 ஆம் ஆண்டில் உள்ளூர் வேட்டைக்காரர் முகம்மது சாவால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன என்று பௌவெட் மற்றும் சா ஆகியோரின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு அப்பியானி நிறுவனம் கூறுகிறது. [2]C[3] சும்மார் பகூரில் இரத்தினங்களைத் தவிர நீலப்பச்சை மணிக்கற்கள், புளோரைட்டு [4], அபடைட்டு, கால்சைட் மற்றும் குவார்ட்சு போன்ற பல்வேறு விலைமதிப்பற்ற மற்றும் பகுதி விலைமதிப்புள்ள இரத்தினங்கள் உள்ளன.
சும்மார் பகூர் கணவாய் சுமயர் பள்ளத்தாக்கை நகர் மாவட்டத்தின் தலைமையிடமான நகர் காசு நகருடன் இணைக்கிறது.