பிரிட்டிஷ் நாவலாசிரியர் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர் From Wikipedia, the free encyclopedia
சுனேத்திரா குப்தா (Sunetra Gupta) (பிறப்பு மார்ச்சு 15, 1965)[2] ஒரு எழுத்தாளர் மற்றும் நோய்ப்பரவலியல் கோட்பாடு குறித்து விளக்கும் பேராசிரியராக ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவருடைய விருப்பம், மலேரியா, எச்.ஐ.வி, இன்ஃபுளுவென்சா மற்றும் மூளையுறை அழற்சி போன்ற நோய்களை உண்டாக்கக்கூடிய கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்வதாகும்.[3][4][5][6][7][8] இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.
சுனேத்திரா குப்தா | |
---|---|
பிறப்பு | 1965 (அகவை 58–59) |
பணியிடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் லண்டன் இம்பீரியல் கல்லூரி |
ஆய்வேடு | தொற்றுநோய் மற்றும் தொற்று நோய்களின் பரிமாற்ற இயக்கவியல் (1992) |
விருதுகள் | ரோசலின்ட் ஃப்ரான்க்ளின் விருது சாகித்திய அகாதமி விருது |
இணையதளம் www www | |
சுனேத்திரா குப்தா, இந்தியாவிலுள்ள கொல்கத்தாவில், துருபா மற்றும் மினாடி குப்தாவிற்கு மகளாகப் பிறந்தார். இவர் உயிரியல் படிப்பில் தேர்ச்சி பெற்று, இளங்கலைப் பட்டத்தை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். மற்றும் முனைவர் பட்டத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பெற்றார்.[9]
குப்தா தற்போது, [எப்போது?] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், விலங்கியல் துறையில் நோய்த் தொற்று அறிவியல் பேராசிரியர். இவர் 'பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ்' ஐரோப்பிய ஆலோசனை வாரியத்தில் அமர்ந்துள்ளார்.[10]
இவர் தனது அறிவியல் ஆய்விற்காக, 'ஜியாலஜிகல் சொசைட்டி ஆஃப் லண்டன்' வழங்கிய அறிவியல் பதக்கம், மற்றும் அரச கழகம் ரோசலின்ட் ஃப்ரான்க்ளின் விருது பெற்றுள்ளார்.
ஜூலை 2013 இல் மேரி கியூரி போன்ற முன்னணி பெண் விஞ்ஞானியுடனான புகழ்பெற்ற அரச கழகத்தின் கோடைக்கால அறிவியல் கண்காட்சியின் போது குப்தாவின் ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டது. [11]
குப்தா பெங்காலியில் தனது முதல் படைப்புகளை எழுதினார். இரவீந்திரநாத் தாகூர் கவிதையின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார். ஆங்கிலத்தில் பல புதினங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அக்டோபர் 2012இல், இவரது ஐந்தாவது புதினமான சோ குட் இன் பிளாக் தெற்காசிய இலக்கியத்திற்கான டி.எஸ்.சி. பரிசுக்காக நீண்ட காலமாக பட்டியலிடப்பட்டது.[12]
இவரது புதினங்கள், சாகித்திய அகாதமி விருது, இலக்கிய விருது, போன்ற விருதுகளைப் பெற்றுள்ளன. இவரது புதினங்களில்,
"மெமொரிஸ் ஆஃப் ரெயின்", பெங்குயின் புக்ஸ் இந்தியா, புது தில்லி 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-016907-2.
த கிளாஸ்ப்ளோயர்ஸ் பிரீத் (1993)
மூன்னைட் இன்டு மார்ஸிபன் (1995)
எ சின் ஆஃப் கலர் (1999)
சோ குட் இன் பிளாக் (2009) போன்றவை அடங்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.