சுத்கஜன் தோர்
From Wikipedia, the free encyclopedia
சுத்கஜன் தோர் (Sutkagan Dor (or Sutkagen Dor) தற்கால பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில், ஈரானின் எல்லைப்புறத்தில், பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்ரான் பிரதேசத்தில் அமைந்த சிந்துவெளி நாகரிகத்தின் தூரமேற்கு எல்லைப்பகுதியாகும்.[1] [2]
விரைவான உண்மைகள் சுத்கஜன் தோர், இருப்பிடம் ...
சுத்கஜன் தோர் | |
---|---|
இருப்பிடம் | பலூசிஸ்தான், பாகிஸ்தான் |
பகுதி | மக்ரன் |
ஆயத்தொலைகள் | 25°29′59.72″N 61°57′3.15″E |
வகை | குடியிருப்புப் பகுதி |
பரப்பளவு | 4.5 ha (11 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
மூடு
சிந்துவெளி தொல்லியல் களமான சுத்கஜன் தோர் தொல்லியல் களம் கராச்சி நகரத்திற்கு மேற்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும், அரபுக் கடற்கரையில் உள்ள குவாடர் துறைமுக நகரத்திற்கு அருகே மக்ரான் கடற்கரை பிரதேசத்தில், தஸ்த் ஆற்றின் கரையில், ஈரான் நாட்டின் எல்லைக்கு அருகே உள்ளது.[1][3][4]