சுதியா நாடு அல்லது சுடியா நாடு (Sutiya Kingdom) (ஆட்சிக் காலம்: 1187-1673)[2]என்பது தற்கால அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் என இரண்டு மாநிலத்தின் பகுதிகளைக் கொண்டது. சுவர்ணகிரியை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை நிறுவியவர் மன்னர் பீர்பால் ஆவார். பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சடியா நகரை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் ஆண்டவர்கள். சீனாவின் சிச்சுவான் மற்றும் திபெத் இனக்குழுவினரின் வழித்தோன்றல்களே சுதியா மக்கள் ஆவர்.

விரைவான உண்மைகள் சுதியா நாடுசடியாচুতীয়া ৰাজ্য (அசாமிய மொழி), தலைநகரம் ...
சுதியா நாடு
சடியா
চুতীয়া ৰাজ্য (அசாமிய மொழி)
1187–1673
தலைநகரம்சுவர்ணகிரி
(1187-1225)
இரத்தினபுரி (தற்கால மஜௌலி நகரம்
(1225-1248)
சடியா
(1248-1524)
பேசப்படும் மொழிகள்அசாமி, சுதியா மொழி
சமயம்
இந்து சமயம், சாக்தம்[1]
அரசாங்கம்முடியாட்சி
முடியாட்சி 
 1187 - 1210
பீர்பால் (முதல்)
 1522 - 1524
நித்தியபாலன் (இறுதி)
வரலாற்று சகாப்தம்அசாமின் மத்தியகால வரலாறு
 நிறுவியவர்
பீர்பால்
1187
 கௌரிநாராயணன் காலத்தில் விரிவாக்கம்
1210 -1250
 அகோம் - சுதியாப் போர்
1513 -17வது நூற்றாண்டு
 சடியா முற்றுகை
17 ஏப்ரல் 1524
 முடிவு
1673
முந்தையது
பின்னையது
[[காமரூபப் பேரரசு]]
[[அகோம் பேரரசு]]
தற்போதைய பகுதிகள்இந்தியா
மூடு

சுதியா நாட்டின் பரப்புகள்

தற்கால அசாம் மாநிலத்தின் லக்கீம்பூர் மாவட்டம், தேமாஜி மாவட்டம், தின்சுகியா மாவட்டம், ஜோர்ஹாட் மாவட்டம், திப்ருகர் மாவட்டம், சோனித்பூர் மாவட்டம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டம், கீழ் சுபன்சிரி மாவட்டம், கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் மற்றும் லோகித் மாவட்டங்கள் சுதியா நாட்டின் பரப்புகளாக அமைந்திருந்தன.[3]

சுதியா நாட்டின் விரிவாக்கம் (1224-1250)

சுதியா நாட்டின் பலமிக்க மன்னரான கௌரிநாராயணன் எனும் இரத்தின துவஜ பாலன் அசாமின் வடகிழக்குப் பகுதிகளை வென்று நாட்டை விரிவுபடுத்தினார்.

வீழ்ச்சி

சுதியா நாட்டின் இறுதி மன்னர் நித்தியபாலன் ஆட்சிக்காலத்தில் சுதியா நாடு கி பி 1524-இல் அகோம் பேரரசால் வீழ்ச்சி கண்டது.

ஆட்சியாளர்கள் (1187 - 1524)

  • பீர்பால் - கயாபால் 1187 - 1210
  • இரத்தினதுவஜபாலன் - கௌரிநாராயணன் 1210 - 1250
  • விஜயத்துவஜபாலன் - சிவநாராயணன் 1250 - 1270
  • விக்கிரமத்துவஜபாலன் - ஜெகத்நாராயணன் 1270- 1285
  • கௌரத்துவஜபாலன் - பிரமோநாராயணன் 1285 - 1305
  • சங்கத்துவஜபாலன் - ஹரிநாராயணன் 1305 - 1325
  • மயூரத்துவஜபாலன் - கொலுக்நாராயணன் 1325 - 1343
  • ஜெயத்துவஜபாலன் - வஜயநாராயணன் 1343 - 1360
  • கர்மத்துவஜபாலன் - நந்தேஷ்வர் 1360 - 1380
  • சத்தியநாராயணன் 1380 - 1400
  • இலக்குமிநாராயணன் 1400 - 1420
  • தர்மநாராயணன் 1420 - 1440
  • பிரத்தியுஷ்நாராயணன் 1440- 1465
  • யாஷ்நாராயணன் 1465 - 1480
  • பூர்ண தவநாராயணன் 1480 - 1500
  • தர்மதுவஜபாலன் - தீரநாராயணன் 1500- 1522
  • நித்தியபாலன் - சந்திரநாராயணன் 1522 - 1524

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.