இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
சிவப்பா நாயக்கர், கேளடியை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார்.[1] இவர் கி.பி 1645 தொடக்கம் 1660 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.[2] இவர் சிறந்த நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் பெற்று விளங்கியவர்.[3]
சிவப்பா நாயக்கர் | |
---|---|
ஆட்சி | கி.பி 1645- கி.பி 1660 |
முன்னிருந்தவர் | வீரபத்திர நாயக்கர் |
பின்வந்தவர் | சிக்க வெங்கடப்ப நாயக்கர் |
அரச குலம் | கேளடி நாயக்கர்கள் |
வேலூரில் இருந்து ஆட்சி செய்த விஜயநகரப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ஸ்ரீரங்கா பீஜப்பூர் சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டு சிவப்பாவிடம் அடைக்கலம் புகுந்தார்.[4] இதன் காரணமாக பிஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களோடு போர் புரிந்து தார்வாடு பகுதியை கைப்பற்றினர். மங்களூர், குந்தாபுரா, ஹொன்னாவர் போன்ற கடலோரப் பகுதியில் உள்ள போர்த்துகீசிய துறைமுகங்கள் கைப்பற்றி கர்நாடக பகுதியில் உள்ள போர்த்துகீசிய அரசியல் அதிகாரத்தை அழித்தார்.[5]
சிவப்பா நாயக்கரால், சந்திரகிரி, பேக்கல், மங்களூர், ஆரிக்கடி மற்றும் அட்கா பகுதிகளில் கோட்டைகள் கட்டப்பட்டன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.