சிறுநீரில் குருதி
From Wikipedia, the free encyclopedia
மருத்துவத்தில் சிறுநீரில் குருதி அல்லது குருதிச் சிறுநீர் (hematuria, haematuria) என்பது சிறுநீருடன் குருதி கலந்து வெளிப்படும் ஒரு நிலையாகும்[1]. பொதுவாக சிறுநீரில் இரத்தச் செவ்வணுக்கள் காணப்படுவதில்லை.
விரைவான உண்மைகள் குருதிச் சிறுநீர் Hematuria, வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் ...
குருதிச் சிறுநீர் Hematuria | |
---|---|
நுணுக்குக்காட்டியில் குருதிச்சிறுநீர் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
ஐ.சி.டி.-10 | N02., R31. |
ஐ.சி.டி.-9 | 599.7, 791.2 |
நோய்களின் தரவுத்தளம் | 19635 |
மெரிசின்பிளசு | 003138 |
ஈமெடிசின் | ped/951 |
பேசியண்ட் ஐ.இ | சிறுநீரில் குருதி |
ம.பா.த | D006417 |
மூடு
இதில் இரு வகையான நிலைகள் காணப்படும். செங்குருதியணுக்கள் சாதாரணமாகவே சிறுநீரில் தெரியுமானால் அது மிகுதியான சிறுநீரில் குருதி (gross haematuria) எனவும், நுண்ணோக்கியினூடாகப் பார்க்கும்போது மட்டுமே தெரியுமானால், அது நுண்ணளவு சிறுநீரில் குருதி (microscopic haematuria) எனவும் அழைக்கப்படும்[1]. மருத்துவரைக் கண்டு மருத்துவம் மேற்கொள்ள வேண்டுவது மிகவும் அவசியமானது.