சிரம்பான் 2

சிரம்பான் நகரத்தின் துணைநகரம் From Wikipedia, the free encyclopedia

சிரம்பான் 2map

சிரம்பான் 2 (மலாய்; ஆங்கிலம்: Seremban 2; சீனம்: 芙蓉 2) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமான சிரம்பான் நகரத்திற்கு துணைநகரமாக திட்டமிட்டு கட்டப்பட்ட நகரமாகும். முன்பு சிரம்பான் நகரத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் இருந்த ஒரு செம்பனை தோட்டத்தில் இந்த நகரம் அமைக்கப்பட்டு உள்ளது.

விரைவான உண்மைகள் துணைநகரம், நாடு ...
சிரம்பான் 2
துணைநகரம்
Seremban 2
நெகிரி செம்பிலான்
Thumb
Thumb
சிரம்பான் 2
      சிரம்பான் 2
ஆள்கூறுகள்: 2°41′N 101°54′E
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்
அரசு
  நகராட்சி சிரம்பான் மாநகராட்சி
மக்கள்தொகை
 (2016)[1]
  மொத்தம்62,000
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
70300
மலேசியத் தொலைபேசி எண்கள்+06-601 2000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N
மூடு

சிரம்பான் நகருக்கு மேற்கே உள்ள மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 218-ஆம் வெளியேற்ற முனையில் (EXIT 218) அமைந்திருக்கும் இந்த நகரத்தை சிரம்பான் மாநகராட்சி நிர்வகிக்கிறது. 2,300 ஏக்கர்கள் (9 km2) பரப்பளவு நிலத்தை உள்ளடக்கியது இந்த சிரம்பான் 2 நகரம்.

சிரம்பான் மாவட்ட நிர்வாக வளாகம், சிரம்பான் நீதிமன்ற வளாகம், சிரம்பான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் சிரம்பான் தீயணைப்பு மீட்புத் துறை தலைமையகம் போன்றவை சிரம்பான் 2 துணை நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.[2]

வளர்ச்சி

Thumb
சிரம்பான் 2-இல் இருந்து போர்டிக்சன் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலை
Thumb
சிரம்பான் நகரில் சமூகச் சேவையாளர் டாக்டர் கிருஷ்ணன் பெயரில் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டு உள்ளது.

சிரம்பான் 2 துணைநகரம் தன்னகத்தே அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நகரமாகும். இதன் மக்கள்தொகை 62,000. இது ஒரு நவீன நகரத்தின் அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. நெகிரி செம்பிலானில் மிகவும் முற்போக்கான மற்றும் வெற்றிகரமான உருவாக்கங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. இதன் கட்டுமானங்கள் தற்போது 90% நிலையில் நிறைவடைந்த நிலையில் உள்ளன.[3]

தேசிய கட்டமைப்பு திட்டம்

சிரம்பான் சுங்கச் சாவடியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும், சிரம்பான் நகரத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் அமைந்துள்ளது. ஏற்கனவே உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை; ELITE எனும் மத்திய இணைப்பு விரைவுச்சாலை ; மற்றும் LEKAS எனும் காஜாங்-சிரம்பான் நெடுஞ்சாலை போன்ற சாலைகள், கோலாலம்பூர், கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயா போன்ற முக்கியமான இடங்களுக்கு சிரம்பான் 2 துணைநகரத்தை மிகவும் அருகில் கொண்டு வந்துள்ளன.[4]

அண்மைய தேசிய கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு சிரம்பான் 2 நுழைவாயிலாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தக் கட்டமைப்பு திட்டத்தில் போர்டிக்சன், நீலாய் மற்றும் லாபு ஆகிய இடங்களும் சேர்க்கப்படுகின்றன. இப்பகுதியில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான மத்திய அரசின் முயற்சிகளில் இதுவும் ஒரு பகுதியாகும்.[5]

சுற்றுப்புற குடியிருப்புகள்

  • கிரீன் இசுதிரீட் மனைகள்
  • செரி கார்கோசா
  • செண்ட்ரல் பார்க்
  • எமரால்டு பார்க்
  • கார்டன் ஓம்ஸ்
  • கார்டன் அவென்யூ
  • கார்டன் சிட்டி மனைகள்
  • சிசன் ஓம்ஸ்
  • S2 அயிட்சு
  • பார்க் அவென்யூ
  • பேர்ல் 132
  • சிட்டி பார்க்
  • அகாசியா
  • சிரம்பான் 2 சிட்டி சென்டர்
  • அவிவா கிரீன்
  • சௌஜானா டூத்தா
  • இயோன
  • சௌஜனா பிரைமா
  • சௌஜனா டிராபிக்கா
  • சிம்பொனி
  • மெலடி

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.