![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/KITLV_87655_-_Isidore_van_Kinsbergen_-_Inscribed_stone_at_Tjiaroeteun_at_Buitenzorg_-_Before_1900.tif/lossy-page1-640px-KITLV_87655_-_Isidore_van_Kinsbergen_-_Inscribed_stone_at_Tjiaroeteun_at_Buitenzorg_-_Before_1900.tif.jpg&w=640&q=50)
சியாருடூன் கல்வெட்டு
இந்தோனேசியாவின் மேற்கு சாவாத்தில் உள்ள 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு / From Wikipedia, the free encyclopedia
சியாருடூன் கல்வெட்டு (Ciaruteun inscription) சியாருடோன் அல்லது சியாம்பியா கல்வெட்டு என்றும் அழைக்கப்படுகிறது, இது 5 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஆகும். இது சிசாடேன் ஆற்றின் துணை ஆறான சியாருடூன் ஆறு பாயம் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தோனேசியாவின் மேற்கு சாவகத்தின் பொகோரிலிருந்து சற்று தொலைவில் உள்ளது. இது இந்தோனேசிய வரலாற்றின் ஆரம்பகால இந்து சாம்ராஜ்யங்களில் ஒன்றான தருமநகர சாம்ராச்சிய காலத்தைச் சேர்ந்தது. [1]:15 தருமநகரை ஆண்ட பூர்ணவர்மன் என்ற மன்னன் என்று கல்வெட்டு கூறுகிறது.
விரைவான உண்மைகள் செய்பொருள், அளவு ...
![]() சியாருடூன் கல்வெட்டு அதன் அசல் இருப்பிடத்தில், சுமார் 1900 இல் | |
செய்பொருள் | கல் |
---|---|
அளவு | 2 இக்கு 1.5 மீட்டர் |
எழுத்து | பல்லவ எழுத்துமுறையில் எழுதப்பட்ட சமசுகிருத கல்வெட்டு |
உருவாக்கம் | 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதி |
கண்டுபிடிப்பு | சியாருடூன் ஆறு, சியாருடூன் இலிர் சிற்றூர், சிபுங்புலாங் மாவட்டம், போகோர் ரீஜென்சி, மேற்கு சாவகம், இந்தோனேசியா |
தற்போதைய இடம் | அமைவிடம்; 6°31′39.84″S 106°41′28.32″E |
மூடு