சிப்ரா ஆறு
இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகும் வற்றாத ஆறு / From Wikipedia, the free encyclopedia
சிப்ரா ஆறு (Shipra) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, இந்தூர் மாவட்டத்தின் உஜ்ஜைனில் விந்திய மலைதொடரில் உற்பத்தியாகி மால்வா பீடபூமி வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிரதேசம் – இராஜஸ்தான் எல்லை மாவட்டமான மண்டசௌர் மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் கலக்கிறது. [1]