சிபித்தாங் மாவட்டம்
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
சிபித்தாங் மாவட்டம்; (மலாய்: Daerah Sipitang; ஆங்கிலம்: Sipitang District) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவில் உள்ள ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். சிபித்தாங் (Sipitang Town) நகரம், சிபித்தாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் சிபித்தாங் மாவட்டம், நாடு ...
சிபித்தாங் மாவட்டம் | |
---|---|
Sipitang District | |
சபா | |
ஆள்கூறுகள்: 5°5′N 115°33′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி |
தலைநகரம் | சிபித்தாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,732.5 km2 (1,055.0 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 34,862 |
இணையதளம் | ww2 |
மூடு
லாங் மியோ (Long Mio) மற்றும் லாங் பாசியா (Long Pasia) எனும் சுற்றுச்சூழல் சுற்றுலா கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இந்தக் கிராமங்களில் தங்கி ஓய்வு எடுப்பதற்காக சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வருகை தருகின்றனர். அதே நேரத்தில் சிந்துமின் (Sindumin) எனும் சிறிய நகரம் சரவாக் மாநிலத்தின் நுழைவாயிலாகவும் செயல்படுகிறது.