சிட்டுக்குருவி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
சிட்டுக்குருவி (House sparrow, உயிரியல் பெயர்: Passer domesticus) என்பது சிட்டுக்குருவிக் குடும்பமான பசாரிடேவில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. சிட்டுக்குருவி ஒரு சிறிய பறவை ஆகும். பொதுவாக இதன் நீளம் 100 செ. மீட்டரும், எடை 100-150 கிராமும் இருக்கும்.[3] சிட்டுக்குருவி குஞ்சு வெளிர் பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும், மற்றும் சிட்டுக்குருவிகள் பிரகாசமான கருப்பு, வெள்ளை, மற்றும் பழுப்பு அடையாளங்களுடனும் காணப்படும். பேஸ்ஸர் பேரினத்தில் உள்ள 25 இனங்களில் இதுவும் ஒன்றாகும். இதன் பூர்வீகம் பெரும்பகுதி ஐரோப்பா, மத்தியதரைக்கடல் பகுதிகள் மற்றும் பெரும்பகுதி ஆசியா ஆகும். இது மனிதனால் வேண்டுமென்றோ அல்லது விபத்தாகவோ ஆத்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் பெரும்பகுதிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்டுக்குருவி உலகிலேயே அதிகபட்சமாகப் பரவிய காட்டுப் பறவையாக உள்ளது.
சிட்டுக்குருவி | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. domesticus |
இருசொற் பெயரீடு | |
Passer domesticus (லின்னேயஸ், 1758) | |
பூர்வீக வாழ்விடங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்விடங்கள் | |
வேறு பெயர்கள் [2] | |
பிரிஞ்சிலா டோமெசுடிகா லின்னேயஸ், 1758 |
சிட்டுக்குருவி மனித குடியிருப்புடன் வலுவாகத் தொடர்புடையது ஆகும். இதனால் நகர்ப்புற அல்லது கிராமப்புற அமைப்புகளில் வாழ முடியும். பரவலாக மாறுபட்ட வாழ்விடங்கள் மற்றும் காலநிலைகளில் காணப்படுகின்ற போதிலும் இது பொதுவாக மனித வளர்ச்சியிலிருந்து தொலைவில் இருக்கும் விரிவான காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கிறது. சிட்டுக்குருவி தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளைப் பெரும்பாலும் உண்கிறது. ஆனால் இது ஒரு சந்தர்ப்பவாத உண்ணி ஆகும். பொதுவாக பூச்சிகள் மற்றும் பல உணவுகளையும் சாப்பிடுகின்றது. இதன் கொன்றுண்ணிகள் வீட்டுப் பூனைகள், வல்லூறுகள், ஆந்தைகள் மற்றும் பல பிற கொன்றுண்ணிப் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவை ஆகும்.
இதன் எண்ணிக்கை, எங்கும் காணப்படும் தன்மை, மனித குடியேற்றங்களுடன் இருக்கும் இணைப்பு ஆகியவை காரணமாக சிட்டுக்குருவி கலாச்சார ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது பரவலாக, பொதுவாக தோல்வியுற்ற முயற்சியாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியதன் காரணமாகக் கொல்லப்படுகிறது. சிட்டுக்குருவி பெரும்பாலும் ஒரு செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு பொதுவாகக் காணப்படும் சின்னமாகவும் உள்ளது. பரவலாகவும் ஏராளமாகவும் இருந்தாலும், இதன் எண்ணிக்கை உலகின் சில பகுதிகளில் குறைந்துவிட்டது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இதன் பாதுகாப்பு நிலையானது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.