சிடைபையோபலேடினைட்டு
ஆண்டிமோனைடு கனிமம் / From Wikipedia, the free encyclopedia
சிடைபையோபலேடினைட்டு (Stibiopalladinite) என்பது Pd5Sb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இக்கனிமத்தில் பலேடியம், ஆண்டிமனி போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன [1]. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறம் மற்றும் வெள்ளியைப் போன்ற சாம்பல் நிறங்களில் ஒளிபுகா கனிமமாக இது அறுகோண படிகத் திட்டத்தில் படிகமாகிறது [2].
விரைவான உண்மைகள் சிடைபையோபலேடினைட்டு Stibiopalladinite, பொதுவானாவை ...
சிடைபையோபலேடினைட்டு Stibiopalladinite | |
---|---|
சிடைபையோபலேடினைட்டு (உலோகத்தன்மை, மையம், கீழே) | |
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Pd5Sb2 |
இனங்காணல் | |
நிறம் | வெள்ளியை போன்ற வெண்மையும் சாம்பலும் |
படிக அமைப்பு | அறுகோணப் படிகத்திட்டம் |
மோவின் அளவுகோல் வலிமை | 4 - 5 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
மூடு
தென் ஆப்பிரிக்காவின் புசுவெல்டு தீப்பாறைத் தொகுதியில் இக்கனிமம் தோற்றம் பெற்றதாக 1929 ஆம் ஆண்டு முதன்முதலாக விவரிக்கப்பட்டது [3].