![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Sharjah_-_Venice_%252811925055175%2529.jpg/640px-Sharjah_-_Venice_%252811925055175%2529.jpg&w=640&q=50)
சார்ஜா
From Wikipedia, the free encyclopedia
சார்ஜா /ˈʃɑːrdʒə/ (அரபு மொழி: ٱلشَّارقَة aš-Šāriqah; வளைகுடா அரபு மொழி: aš-šārja[1]) ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜா அமீரகத்தின் தலைநகரம் ஆகும். மக்கள் தொகை அடிப்படையில் இது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள நகரங்களில் துபாய், அபுதாபி ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது பெரிய நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Sharjah_city_skyline.jpg/640px-Sharjah_city_skyline.jpg)
விரைவான உண்மைகள் சார்ஜா ٱلشَّارقَة, நாடு ...
சார்ஜா
ٱلشَّارقَة | |
---|---|
சார்ஜா | |
மேலிர்ந்து வலஞ்சுழியாக: அல் கான் கழிமுகம், பண்பாட்டு மாவட்டம், அல்-நூர் மசூதி, கலாச்சார மாளிகை, நீலச் சந்தை, அல் கஸ்பா கால்வாய் | |
ஆள்கூறுகள்: 25°21′27″N 55°23′27″E | |
நாடு | ![]() |
அமீரகம் | சார்ஜா அமீரகம் |
அரசு | |
• வகை | அரசியலமைப்பு முடியாட்சி |
• சேக் | சுல்தான் பின் முகமது அல்-காசிமி |
பரப்பளவு | |
• மாநகரம் | 235.5 km2 (90.9 sq mi) |
மக்கள்தொகை (2019) | |
• நகரம் | 12,74,749 |
மூடு
இந்நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலாச்சாரத்திற்கும் வர்த்தகத்திற்கும் முதன்மையான ஒரு நகரமாக விளங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இது 7.4% பங்களிக்கிறது.[2] ஏறத்தாழ 235 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நகரத்தின் மக்கள் தொகை 800,000 ஆகும்.