From Wikipedia, the free encyclopedia
சார்சத்தா மாவட்டம் (Charsadda District) (பஷ்தூ: چارسدہ ولسوالۍ, உருது: ضلع چارسدہ), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சார்சத்தா நகரம் ஆகும். சார்சாத்தா நகரம், மாகாணத் தலைநகரான பெசாவர் நகரத்திற்கு வடகிழக்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இராமாயணம் காவியத்தில் இந்நகரின் பெயர் புஷ்கலாவதி எனக்குறிப்பிட்டுள்ளது.
சார்சத்தா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கீழ் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | Pakistan |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
தலைமையிடம் | சார்சத்தா நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• Total | 996 km2 (385 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• Total | 16,10,960 |
• அடர்த்தி | 1,600/km2 (4,200/sq mi) |
• நகர்ப்புறம் | 2,70,204 |
• நாட்டுப்புறம் | 13,40,756 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 3 |
இணையதளம் | charsadda |
2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 16,10,960 ஆகும். அதில் ஆண்கள் 817,651 மற்றும் பெண்கள் 7,93,298 உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 66.17% ஆகும். 83.23% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 873 பேர் மட்டுமே உள்ளனர்.[1]
சார்சத்தா மாவட்டம் சார்சத்தா, தாங்கி மற்றும் சாப்கத்தார் எனும் 3 தாலுகாக்களும், 58 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.[2]
இம்மாவட்டம் பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்திற்கு 4 தொகுதிகளையும்[3];கைபர் பக்துன்வா மாகாணச் சட்டமன்றத்திற்கு 5 தொகுதிகளையும் கொண்டுள்ளது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.