From Wikipedia, the free encyclopedia
சாரியர் (Shahriar)(பாரசீக மொழி: شهريار, ரோமானியம் : Shahrīār, Shahreyār, Shahriyār; பிற பெயர்கள்: Alī Shāh ‘Avaẕ : Ali Shāh ‘Iwaz) எனப்படும் இந்த நகரமானது, சாரியர் கவுன்டியின் தலைநகரம் ஆகும். பெரும்பான்மையான நகரங்களைப் போன்றே, இந்த நகரத்தின் ஆண்டு சராசரி மழையளவும் [1] 25 மி.மீ. ஆக உள்ளது. சாரியர் நகராட்சி /நகராண்மைக் கழகமானது, 1952 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[2] அப்பொழுது இருந்த அந்த நகரத்தின் மக்கள் தொகை 5,000 நபர்கள் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
சாரியர்
شهريار | |
---|---|
ஊர் | |
ஆள்கூறுகள்: 35°39′35″N 51°03′33″E | |
Country | ஈரான் |
Province | Tehran |
County | Shahriar |
Bakhsh | Central |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 3,09,607 |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஈரானிய நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் இருபத்தாறவது இடத்தினைப் பெறுகிறது.[2] 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 51,814 குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 328,190 ஆக இருந்தது. பொதுவாக ஈரான் நாட்டின் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[3][4] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 309,607 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,2011ஆம் ஆண்டு, 249,473 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +24.10% அதிகரித்துள்ளது.
இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், தவிர எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களைப் பெற்றிருந்தாலும், அத்தொடர்புகளை விட, அதிக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்கேக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[5] வங்கிகளிலும் கூட கடன் வசதி தரும் போது, இந்த குடும்ப வரலாறுகளைக் கணக்கில் கொண்டு பணம் பெறுவது, எளிமையான நடைமுறைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது.[சான்று தேவை]
சாரியார் நகராட்சியும், இந்நாட்டின் புறநகர் பேருந்து அமைப்பும் தனித்தனியே இரு பேருந்து இயக்கங்களின் வழியே, நகர மக்களுக்குப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துகின்றன. தெகுரான் நகரமும், கராஜு நகருடனும் இணைக்கிறது. அதே நேரத்தில் சுற்றியுள்ள சிறிய நகரங்களின் தொகுதிகளுக்கும், அதன் வழித்தடங்களிலும் இயக்குகின்றன.
நிறம் | நகரம் | தூரம் (கி.மீ.) | இணைப்புகள் | |||
---|---|---|---|---|---|---|
சாரியர்-அச்சாரி | 28.5 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-ஆசாதி | 28 | மேய்தான்-இ ஆசாதி மாநகர நிலையம் தெகுரான் மேற்கு முனையம்
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-கராய்ச்சு | 18 | கராய்ச்சு மாநகர நிலையம் சாகித் சோல்தனி பேருந்து முனையம் கராய்ச்சு நகரப் பேருந்து
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-ஆன்டிசே | 7 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-சஃஆதாசுத்து | 22 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-அமிர்யே | 6 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-வகிடேயி | 8 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-பெர்டோவ்சுயே | 8 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-சாயிடேசர் | 12 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
| ||||
சாரியர்-சபாசர் | 12 |
மலர்டு, புறநகர் பேருந்து அமைப்பு
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.