From Wikipedia, the free encyclopedia
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி (San Francisco Bay Area), வழக்கமாக உள்நாட்டில் பே ஏரியா அல்லது விரிகுடாப் பகுதி) வடக்கு கலிபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோ, சான் பப்லோ கயவாய்களைச் சுற்றியுள்ள மிகவும் அறியப்பட்ட மண்டலமாகும். இந்த மண்டலத்தில் சான் ஓசே, சான் பிரான்சிஸ்கோ, ஓக்லாந்து போன்றப் பெருநகரங்களும் பெருநகரப் பகுதிகளும் மட்டுமன்றி பல சிறு நகரிய, சிற்றூர்களும் அடங்கியுள்ளன.[2] விரிகுடாப் பகுதியிலுள்ள ஒன்பது மாவட்டங்கள்: அலமேடா, கான்ட்ரா கோஸ்டா, மாரின், நாப்பா, சான் பிரான்சிஸ்கோ, சான் மாதியோ, சான்ட்டா கிளாரா, சோலனோ, சோனோமா.[2][3] ஏறத்தாழ 7.65 மில்லியன் வாழும் இப்பகுதியில்[1] பல நகரங்கள், ஊர்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்புடைய மண்டல, மாநில, மற்றும் தேசிய பூங்காக்கள், சாலைப் பிணையம், இருப்புப் பாதைகள், பாலங்கள், மலையூடுத் தடங்கள் மற்றும் நாட்பநசியர் தொடர்வண்டிகள் அடங்கியுள்ளன. இந்த மண்டல கூட்டுப் புள்ளிவிவர பகுதி கலிபோர்னியாவில் இரண்டாவது மிகப் பெரிய பகுதியாக உள்ளது. அமெரிக்காவில் ஐந்தாவது பெரிய கூட்டு புள்ளிவிவரப் பகுதியாக உள்ளது. இது உலகின் 43வது மிகப்பெரும் நகரியப் பகுதியாக விளங்குகின்றது.
விரிகுடாப் பகுதி | ||||
---|---|---|---|---|
ஒன்பது மாவட்ட மண்டலம் | ||||
| ||||
கலிபோர்னியாவினுள் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் அமைவிடம் | ||||
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு | |||
மாநிலம் | கலிபோர்னியா | |||
பெரு நகரங்கள் | பட்டியல்
| |||
பரப்பளவு | ||||
• மாநகரம் | 600.6 km2 (231.9 sq mi) | |||
உயர் புள்ளி ஆமில்டன் மலையில் | 1,330 m (4,360 ft) | |||
தாழ் புள்ளி அல்விசோவில் | −3 m (−10 ft) | |||
மக்கள்தொகை (சூலை 1, 2015) | ||||
• ஒன்பது மாவட்ட மண்டலம் | 7.65 மில்லியன்[1] | |||
• அடர்த்தி | 423/km2 (1,096/sq mi) | |||
நேர வலயம் | ஒசநே−8 (பசிபிக்) | |||
• கோடை (பசேநே) | ஒசநே−7 (பசிபிக்) |
ஐக்கிய அமெரிக்காவில் பார்ட்சூன் 500 நிறுவனங்கள் மிக கூடுதலாக உள்ள இடங்களில் இரண்டாவதாக இப்பகுதி உள்ளது. இயற்கை வனப்பு, முற்போக்கான அரசியல், தொழில் முனைப்பு, மற்றும் பன்மய இனக்குழுக்கள்[4][5] இப்பகுதிக்கு அடையாளங்களாக உள்ளன. மிகுதியான கல்லூரி பட்டம் பெற்றவர்கள் உள்ள இடங்களில் இரண்டாவதாக உள்ளது.[6][7] 2010 கணக்கெடுப்பின்படி இங்குள்ளோரின் சராசரி குடும்ப வருமானம் மாநில சராசரியை விடக் கூடுதலாக உள்ளது.[8] கலிபோர்னியா நிதித்துறையின் 2013 மக்களியல் அறிக்கைப்படி மற்ற பகுதிகளிலிருந்து இங்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கை வீதம் இங்கிருந்து செல்வோரின் எண்ணிக்கை வீதத்தை விடக் கூடுதலாக உள்ளது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.