![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/37/JRC_N700_series_Z28.jpg/640px-JRC_N700_series_Z28.jpg&w=640&q=50)
சான்யோ சின்கான்சென்
From Wikipedia, the free encyclopedia
சான்யோ சின்கான்சென் (Sanyō Shinkansen (山陽新幹線, Sanyō Shinkansen?)) என்பது ஒசாக்காவில் உள்ள புது-ஒசாக்கா நிலையத்தையும், புக்குவோக்காவில் உள்ள ஹக்காட்டா நிலையத்தையும் இணைக்கும், ஜப்பானிய சின்கான்சென் அதிவேக இரும்புவழிப் பிணையத்தின் தடம் ஆகும். மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் (JR West) இயக்கும் இத்தடம், டோகாய்டோ சின்கான்சென்னின் மேற்குத் தொடர்ச்சி ஆகும். மேலும் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளுக்கிடையில் உள்ள முக்கிய நகரங்களான கோபே, ஹிமேஜி, ஒகாயாமா, ஹிரோஷிமா மற்றும் கிடாகியூஷூ ஆகியவைக்கு சேவைகளை அளிக்கிறது.
விரைவான உண்மைகள் சான்யோ சின்கான்சென், கண்ணோட்டம் ...
சான்யோ சின்கான்சென் | |||
---|---|---|---|
![]() ஒகாயாமா மற்றும் ஆயோய் இடையே ஓடும் என்700 வரிசை சின்கான்சென், ஏப்ரல் 2009 | |||
கண்ணோட்டம் | |||
பூர்வீக பெயர் | 山陽新幹線 | ||
உரிமையாளர் | மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் | ||
வட்டாரம் | ஜப்பான் | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 19 | ||
சேவை | |||
வகை | சின்கான்சென் | ||
செய்குநர்(கள்) | மத்திய ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் கியூஷூ இரும்புவழி நிறுவனம் மேற்கு ஜப்பானிய இரும்புவழி நிறுவனம் | ||
பணிமனை(கள்) | ஒசாக்கா, ஒகாயாமா, ஹிரோஷிமா, ஹக்காட்டா | ||
சுழலிருப்பு | 500 வரிசை 700 வரிசை என்700 வரிசை | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 15 மார்ச் 1972 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 553.7 கி.மீ. (344.1 மை) | ||
தட அளவி | 1,435 மி.மீ. (4 அடி 8 1⁄2 அங்) | ||
இயக்க வேகம் | மணிக்கு 300 கி.மீ. | ||
|
மூடு