From Wikipedia, the free encyclopedia
சான்யே 5 (Chang'e 5, எளிய சீனம்: 嫦娥五号பின்யின்: Cháng'é wǔhào) என்பது சீன சந்திர ஆய்வு திட்டத்தின் ஒரு ஆளிள்ளலாத தானியங்கி செயற்கைக்கோள் ஆகும். அதன் முன்னோடிகளைப் போலவே, விண்கலத்திற்கும் சீன நிலவு தெய்வமான சான்யே எனப் பெயரிடப்பட்டது. இது 23 நவம்பர் 2020 அன்று ஹைனன் தீவின் வென்ச்சாங் விண்கல வெளியீட்டு தளத்திலிருந்து 20:30 UTC க்கு ஏவப்பட்டு 2020 டிசம்பர் 1 ஆம் தேதி சந்திரனில் தரையிறங்கியது, அதன்பிறகு 16 டிசம்பர் 2020 அன்று 17:59 (ஒசநே) மணிக்கு சந்திர மாதிரிகளுடன் பூமிக்குத் திரும்பியது.[3][4]
சான்யே 5 -செலுத்தியிலிருந்து பிரிக்கப்படும் ஆய்வு (ஓவியக் கலைஞரின் எண்ணம்) | |||||
திட்ட வகை | மாதிரி எடுத்துத் திரும்பும் திட்டம் | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | சீன தேசிய விண்வெளி நிர்வாகம் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
தயாரிப்பு | செயற்கைக்கோள் ஏவூர்தி செலுத்தும் தொழில்நுட்ப சீன அகாதெமி | ||||
ஏவல் திணிவு | 8,200 kg (18,100 lb)[1] | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | 23 நவம்பர் 2020 20:30 ஒ.ச.நே 24 நவம்பர் 2020 04:30 சீ.சீ.நே[2] | ||||
ஏவுகலன் | லாங் மார்ச் 5 | ||||
ஏவலிடம் | வென்சாங் விண்கல ஏவும் தளம் | ||||
ஒப்பந்தக்காரர் | செயற்கைக்கோள் ஏவூர்தி செலுத்தும் சீன தொழில்நுட்ப அகாதெமி | ||||
திட்ட முடிவு | |||||
தரையிறங்கிய நாள் | 16 திசம்பர் 2020, 17:59 ஒசநே மீள வரும் கலன் | ||||
தரையிறங்கும் இடம் | உள் மங்கோலியா, சீனா | ||||
----
|
சான்யே 5 ஆனது 1,731 கிராம் நிலவிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வந்தது.[5] மாதிரிகளைக் கொண்டு திரும்பும் பணித்திட்டத்தில் இது சீனாவின் முதல் திட்டமாகும். 1976 ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் லூனா 24 க்குப் பிறகு முதல் சந்திர மாதிரி கொண்டு திரும்பும் திட்டப்பணி ஆகும்.[6] இந்தப் பணியை முடிப்பதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்குப் பிறகு சந்திரனில் இருந்து திரும்பிய மாதிரிகளை வெற்றிகரமாகப் பெற்ற மூன்றாவது நாடாக சீனா ஆனது.
சீன சந்திர ஆய்வு திட்டம் அதிகரிக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நான்கு [7] கட்டங்களில் நடத்த வடிவமைக்கப்பட்டுள்ளது:
இந்த திட்டம் 2030 களில் மனிதர்களால் சந்திரனில் தரையிறங்குவதை எளிதாக்குவதையும், சந்திர தென் துருவத்திற்கு அருகில் ஒரு நிலையத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.[9]
இத்திட்டப்பணி நான்கு தொகுதிகள் அல்லது கூறுகளைக் கொண்டுள்ளது:[10][11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.