From Wikipedia, the free encyclopedia
சான்டியாகோ கசோர்லா (Santiago Cazorla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈsanti kaˈθorla ɣonˈθaleθ]; பிறப்பு திசம்பர் 13, 1984) என்பவர் எசுப்பானிய நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். தற்போது இங்கிலாந்து பிரீமியர் லீக் அணியான ஆர்சனலிலும் எசுப்பானியா தேசிய காற்பந்து அணியிலும் ஆடிவருகிறார். இவர் ஒரு திறம்மிக்க தாக்கும் நடுக்கள வீரர் ஆவார்; இவர் தனது இரு கால்களினாலும் கால்பந்தினைக் கட்டுப்படுத்துவதில் தேர்ந்தவர் ஆவார்.[2][3] 2013-ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த 10-வது கால்பந்து ஆட்டக்காரராகப் புளூம்பெர்க் இதழில் வரிசைப்படுத்தப்பட்டார்.[4]
2012-ஆம் ஆண்டில் ஆர்சனல் அணிக்காக கசோர்லா ஆடும்போது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | சான்டியாகோ கசோர்லா கொன்சாலேசு | ||
பிறந்த நாள் | 13 திசம்பர் 1984 | ||
பிறந்த இடம் | லானெரா, எசுப்பானியா | ||
உயரம் | 1.68 m (5 அடி 6 அங்) (5 அடி 6 அங்)[1] | ||
ஆடும் நிலை(கள்) | நடுக்கள வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | ஆர்சனல் | ||
எண் | 19 | ||
இளநிலை வாழ்வழி | |||
1992–1996 | கோவடோங்கா | ||
1996–2003 | ரியல் ஒவியேடோ | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2003–2004 | விய்யாரியல் "பி" அணி | 40 | (4) |
2003–2006 | விய்யாரியல் | 54 | (2) |
2006–2007 | ரெக்ரியேட்டிவோ | 34 | (7) |
2007–2011 | விய்யாரியல் | 127 | (23) |
2011–2012 | மலாகா | 38 | (9) |
2012– | ஆர்சனல் | 121 | (23) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2004–2006 | எசுப்பானிய 21 வயதுக்குட்பட்டோருக்கான அணி | 7 | (0) |
2008– | ஸ்பெயின் | 77 | (14) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 21:08, 15 May 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 21:28, 13 November 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
எசுப்பானிய தேசிய அணியில் 75 முறை ஆடியுள்ள இவர் யூரோ 2008 மற்றும் யூரோ 2012 போட்டித் தொடர்களில் பங்கெடுத்துள்ளார்; அவ்விரு கோப்பைகளையும் எசுப்பானிய அணி வென்றது. மேலும் எசுப்பானிய 2014 உலகக்கோப்பை காற்பந்து அணியிலும் இடம் பெற்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.