சான்டா குரூசு தெ டெனிரீஃபே
From Wikipedia, the free encyclopedia
சான்டா குரூசு தெ டெனெரீஃப் (Santa Cruz de Tenerife) அல்லது வழமையாக சான்டா குரூசு எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நகரம் (லாசு பல்மாசுடன் இணைந்து) கேனரித் தீவுகளின் தலைநகரமாகவும் சான்டா குரூசு தெ டெனெரீஃப் மாநிலத்தின் தலைநகரமாகவும் டெனெரீப் தீவின் தலைநகரமாகவும் உள்ளது. சான்டா குரூசின் மக்கள்தொகை 206,593 (2013) ஆகும்.[3] சான்டா குரூசு பெரும் நகரிய மண்டலம் நகர எல்லைகளுக்கு அப்பால் விரிந்துள்ளது; இதன் மக்கள்தொகை 507,306 ஆகும்.[5] மேனரித் தீவுகளில் உள்ள நகரங்களில் சான்டா குரூசு இரண்டாவது பெரிய நகரமாகும். டெனெரீஃப் தீவின் முதன்மை நகரமாக விளங்கும் சான்டா குரூசின் மக்கள்தொகை தீவின் மக்கள்தொகையில் பாதியாகும்.
விரைவான உண்மைகள் சான்டா குரூசு தெ டெனெரீஃப், நாடு ...
சான்டா குரூசு தெ டெனெரீஃப் | |
---|---|
நகராட்சி | |
அடைபெயர்(கள்): "லா காபிடல் சிச்சாரெரா", "லா காபிடல் டினெர்பினா", "லா காபிடல் சான்டாகுரூசெரா", "அத்திலாந்திக்கின் சிட்னி".[1] | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | கேனரி தீவுகள் |
மாநிலம் | சான்டா குரூசு தெ டெனெரீஃப் |
தீவு | டெனெரீஃப் |
நிறுவனம் | 3 மே 1494, "ரியல் தெ லா சான்டா குரூசு" என நிறுவப்பட்டது |
பரப்பளவு | |
• நகராட்சி | 150.56 km2 (58.13 sq mi) |
ஏற்றம் | 4 m (13 ft) |
மக்கள்தொகை (2013)[3] | |
• நகராட்சி | 2,06,593 |
• அடர்த்தி | 1,400/km2 (3,600/sq mi) |
• நகர்ப்புறம் | 5,38,000[4] |
இனங்கள் | Santacrucero, ra Chicharrero, ra |
நேர வலயம் | மேற்கு ஐரோப்பிய நேரம் |
• கோடை (பசேநே) | மேற்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம் |
அஞ்சல் குறியீடு | 38001-38010 |
அழைப்புக் குறியீடு | [(+34 922 + 6 எண்கள்)] |
மொழிகள் | எசுப்பானியம் |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு
2012இல், பிரித்தானிய செய்தித்தாள் தி கார்டியன் வாழ்வதற்கு சிறப்பான உலகின் ஐந்து இடங்களில் ஒன்றாக சான்டா குரூசை தெரிந்தெடுத்துள்ளது.[6]