சலிம் அலி பறவைகள் சரணாலயம்

From Wikipedia, the free encyclopedia

சலிம் அலி பறவைகள் சரணாலயம்map

சலீம் அலி பறவைகள் சரணாலயம் (Salim Ali Bird Sanctuary) என்பது சதுப்புநில பரப்பில் காணப்படும் பறவைகள் சரணாலயமாகும். இது இந்தியாவின் கோவா மாநிலத்தில் மண்டோவி ஆற்றின் குறுக்கே சோரோ தீவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்குப் புகழ்பெற்ற இந்திய பறவையியலாளர் சலீம் அலி பெயரிடப்பட்டது.

சலீம் அலியின் பெயரில் அமைந்த இன்னொரு சரணாலயத்தைப் பற்றி அறிய தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
விரைவான உண்மைகள் சலிம் அலி பறவைகள் சரணாலயம், அமைவிடம் ...
சலிம் அலி பறவைகள் சரணாலயம்
Dr. Salim Ali Bird Sanctuary
Thumb
சரணாலய நுழைவாயில்
Thumb
Map showing the location of சலிம் அலி பறவைகள் சரணாலயம்
கோவா வரைபடம், இந்தியா
அமைவிடம்சோரோ தீவு, கோவா, இந்தியா
அருகாமை நகரம்பனாஜி
ஆள்கூறுகள்15°30′53″N 73°51′27″E
பரப்பளவு178 ha (440 ஏக்கர்கள்)
நிறுவப்பட்டது1988
மூடு

இந்த சரணாலயம் மற்றும் தீவினை ரிபாண்டருக்கும் சோரோவிற்கும் இடையே இயங்கும் படகு சேவையினைப் பயன்படுத்தி அடையலாம். . இங்கு ரைசோபோரா முக்ரோனாட்டா, அவிசென்னியா அஃபிசினாலிஸ உள்ளிட்ட பிற சிற்றினங்களுக்கிடையே அமைக்கப்பட்ட நடைபாதை வழியாக சரணாலயத்திற்குள் சென்றுவரலாம்.

விளக்கம்

Thumb
சரணாலயத்திற்குள் அமைந்துள்ள நடைபாதை

இந்த சரணாலயமானது 178 ha (440 ஏக்கர்கள்) . பரப்பில் அலையாத்திக் காடுகள் சூழ அமைந்துள்ளது .

தாவரங்களும் விலங்குகளும்

Thumb
சலீம் அலி பறவைகள் சரணாலயம் - இந்தியாவின் மிகவும் பிரபலமான பறவைகள் சரணாலயங்களில் ஒன்றாகும்.

இந்தச் சரணாலயத்தில் பல வகையான பறவைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவான காணப்படும் பறவை இனங்களாக, சிறிய பச்சைக் கொக்கு மற்றும் மேற்கு காரை கொக்கு அடங்கும். பதிவுசெய்யப்பட்ட பிற பறவைகள் பட்டியலில் சிறிய குருகு, கருங்குருகு, சிவப்பு கணு, கோரை உள்ளான் மற்றும் கோணமூக்கு உள்ளான் (நிலையற்ற மணல் கரைகளில்) ஆகியவை அடங்கும். [1] இந்த சரணாலயம் மண்ஸ்கிப்பர்கள், ஃபிட்லர் நண்டுகள் மற்றும் பிற சதுப்புநில உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. டெலியோடானாய்ஸ் இண்டியானிஸ் என்ற கிறஸ்டேசியன் இந்த சரணாலயத்திலிருந்து சேகரிக்கப்பட்டதன் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது.[2]

ஊடகம்

மேலும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.