சர்ச்லைட் பிக்சர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
சர்ச்லைட் பிக்சர்ஸ் (முன்னர்: பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ்) என்பது அமெரிக்க நாட்டு திரைப்பட படப்பிடிப்பு வளாகம் ஆகும். இது த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்ஸின் துணை நிறுவனமும் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பிரிவும் ஆகும்.[3] இது பெரிய திரைப்பட படப்பிடிப்பு வளாகமான 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தின் ஒரு சகோதர படப்பிடிப்பு வளாகம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளின் சுகந்திர திரைப்படங்களை தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்து வருகின்றது. அத்துடன் நகைச்சுவை நாடகம், திகில் மற்றும் வெளிநாட்டுத் திரைப்படங்களையும் தயாரிக்கிறது.
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
வகை | துணை |
---|---|
நிறுவுகை | 1994; 30 ஆண்டுகளுக்கு முன்னர் (1994) |
நிறுவனர்(கள்) | டாம் ரோத்மேன்[1] |
தலைமையகம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா |
சேவை வழங்கும் பகுதி | உலகளவில் |
முதன்மை நபர்கள் | நான்சி உட்லி (இணைத் தலைவர்) ஸ்டீபன் கிலுலா (இணைத் தலைவர்) |
தொழில்துறை | திரைப்படத்துறை |
உற்பத்திகள் | திரைப்படம் |
வருமானம் | ▲ $6.50 million (2007)[2] |
பணியாளர் | 40 |
தாய் நிறுவனம் | த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் |
மூடு