பாறையின் சிறுதுண்டங்களின் சேர்மானம் From Wikipedia, the free encyclopedia
சரளைக் கல்(ஆங்கிலம்: Gravel /ˈɡrævəl/) என்பது பாறையின் சிறுதுண்டங்களின் இலகுவான சேர்மானம் ஆகும். சரளைக் கல் துணிக்கைகளின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுவதுடன் மணிகள் முதல் பாறைத்துண்டு வரைப் பல வகையில் அமையும். துணிக்கையின் அளவின் அடிப்படையில் சரளைக் கற்களை மணியளவான சரளைக் கற்கள்(2 முதல் 4 mm or 0.079 முதல் 0.157 அங்) கூழங்கற்கள் என (4 முதல் 64 mm or 0.2 முதல் 2.5 அங்) வகைப்படுத்தலாம். ISO 14688 தரத்தின் படி சரளைக் கற்கள் நுண்ணியது, நடுத்தரம், பெரியது என 2 mm க்கு 6.3 mm க்கு 20 mm க்கு 63 mm ஆக வகைப்படுத்தப்படும். ஒரு கனமீட்டர் சரளைக் கல் திணிவளவில் 1,800 கி.கி (கன அடியின் திணிவு 3,000 இறத்தல்) ஆகும்.
சரளைக் கற்கள் வணிக ரீதியில் பல்வேறு உபயோகங்களைக் கொண்ட ஒரு உற்பத்திப் பொருள் ஆகும். வீதிகளின் மேற்பரப்புகள் சரளைக் கற்களால் படலிடப் படுகின்றன. உலக அளவிலே அதிக வீதிகள் பைஞ்சுதைகளால் அல்லது கருங்காரைகளால் படலிடப்படுவதிலும் அதிக அளவில் சரளைக் கற்களால் படலிடப் படுவது அதிகமாகும்.; உருசியாவில் மட்டும் 400,000 km (250,000 mi) சரளைக் கல் வீதிகள் காணப்படுகின்றன.[1] பைஞ்சுதை உற்பத்தியிலும் மணலும், சரளைக் கல்லும் முக்கியமானதாகும்.
சரளைக் கல் படிவுகள் கானப்படுதல் பொதுவான புவியியல் கட்டமைப்பு ஆகும். பாறைகள் வானிலையாலழிதல் மற்றும் அரிப்புக்குள்ளாவதால் இவை உருவாகின்றன. நீரோட்டங்கள் மற்றும் அலைகள் சரளைக் கற்களின் தேக்கத்தை பெருமளவாக்குகின்றன. இதனால் சில வேளைகளில் சரளைக் கற்கள் இறுக்கமடைந்து கலப்புப் பாறைகள் எனப்படும் அடையற் பறைகளாக மாறுகின்றன. இயற்கை சரளைக் கற்கள் மனிதத் தேவைகளுக்கு குறைவாகக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் சுண்ணாம்புக் கல், கருங்கள் மற்றும் மட்கல் முதலானவை கல் உடைக்கும் வேலைத்தலங்களில் உடைக்கப்படுகின்றன.
சரளைக் கல் உடைக்கும் வேலைத் தலங்கள் சரளைக் கற்குழிகள் எனப்படும். தெற்கு இங்கிலாந்து குறிப்பாக அதிக அளவு சரளைக் கல்லினை வைத்திருப்பதற்காக காரணம் பனியுகத்திலிருந்து அதிக அளவிலான சரளைக் கற் படிவுகள் ஏற்பட்டமையாகும்.
2006 இன் படி, ஐக்கிய அமெரிக்க நாடுகள் தன் உலகில் சரளைக் கல் நுகர்வில் முன்னணியில் உள்ளனர்.[2][3]
சரளைக் கற்கள் என்பதை குறிக்க்கும் ஆங்கில சொல்லான gravel பிரேடொன் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகின்றது. பிரேடொன் மொழியில் "grav" என்பது கரையோரம் என்பதைக் குறிக்கும். கரையோரத்தில் காணப்படும் சிறுகற்கள் என அது கூறப்பட்டாலும் பல அகராதிகளில் இது புறக்கணிக்கப்பட்டுள்ளது. பழைய பிரேஞ்சுச் சொல்லான gravele[4] or gravelle.[5]
சரளைக் கல் என்பது பொதுவாக பல்வேறு அளவுடைய கற்கள், மண், களி என்பவற்றின் கலவையாயிருத்தல் ஆகும். அமெரிக்கன் ஆங்கிலத்தில் சிறு துண்டுகளாக உடைக்கப்பட்ட குன்றுகள் துகள் கல் எனப்படும்.[6][7]
சரளைக் கற்களின் வகைகளாவன:
சரளைக் கற்கள் அதிகளவாகக் காணப்படும் பகுதிகளில் தவர வளர்ச்சி சிறப்பற்றதாக காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது.[9] இந்த பாதிப்பான விளைவுக்குக் காரணம், சரளைக் கற்கள் ஈரலிப்பை தேக்குவதில் திறனற்றவை. அதே போல் போசணைக் கனியுப்புகளை கொண்டிருப்பதிலும் போதாமை கொண்டது. இதனால் சரளைக் கற்கள் பெரும்பாலான கனியுப்புக்களை குறைந்த அலவிலேயே கொண்டிருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.