சம்போ
From Wikipedia, the free encyclopedia
சம்போ உருசியாவின் சண்டைக் கலையும் சண்டை விளையாட்டும் ஆகும்.[1][2] சம்போ என்பதன் அர்த்தம் ஆயுதமின்றி தற்பாதுகாப்பு என்பதாகும். 1920 களில் சோவியத் செஞ்சேனையினால் உருவாக்கப்பட்ட இது தற்போது மேம்பட்டுள்ளது. பல சண்டைக் கலைகளின் தொகுப்பான இது யுடோ போன்ற சண்டைக் கலைகளை தன் ஆரம்பமாகக் கொண்டது. விக்டோர் சிபிரிடோனோ மற்றும் வசிலி ஒசுசேற்கோ என்பவர்களால் சம்போ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயினும் வசிலி ஒசுசேற்கோவின் மாணவரான அன்டோலி காரலம்பியே சம்போவின் நிறுவனராக அறியப்படுகிறார். 1938 இல் தேசிய விளையாட்டாக சோவியத் ஒன்றிய விளையாட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் நோக்கம், தோன்றிய நாடு ...
![]() | |
---|---|
நோக்கம் | நெருக்கிப்பிடித்தல், முழு தாக்குதல், கலப்பு சண்டைக் கலை |
தோன்றிய நாடு | ![]() |
பெயர் பெற்றவர்கள் | விளாதிமிர் பூட்டின் |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
Official website | www.sambo.com |
மூடு