மலேசியாவின் அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
சபா ஐக்கிய மக்கள் கட்சி (ஆங்கிலம்: United Sabah People's Party; மலாய்: Parti Bersatu Rakyat Sabah) (PBRS) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள ஒரு சிறுபான்மை அரசியல் கட்சியாகும். தற்போது சபா ஐக்கிய மக்கள் கட்சி அதன் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) தலைமையில் உள்ளது.
சபா ஐக்கிய மக்கள் கட்சி United Sabah People's Party Parti Bersatu Rakyat Sabah ڤرتي برساتو رعيت سابه 沙巴人民團結黨 | |
---|---|
சுருக்கக்குறி | PBRS |
தலைவர் | ஆர்தர் ஜோசப் குருப் (Arthur Joseph Kurup) |
செயலாளர் நாயகம் | ரிச்சர்ட் கசுதும் |
நிறுவனர் | ஜோசப் குருப் (Joseph Kurup) |
தொடக்கம் | 3 மார்ச் 1994 |
சட்ட அனுமதி | 11 மார்ச் 1994 |
பிரிவு | ஐக்கிய சபா கட்சி (PBS) |
தலைமையகம் | Blok B, Lot 19, Tingkat Dua, Lorong Singgah Mata 2, Asia City, 88000 கோத்தா கினபாலு, சபா |
கொள்கை | தேசியவாதம் |
அரசியல் நிலைப்பாடு | வலது சாரி |
தேசியக் கூட்டணி | பாரிசான் நேசனல் (1994–2018), (2020) சபா ஐக்கிய கூட்டணி (2018–2020) கூட்டணிகள்: பெரிக்காத்தான் நேசனல் (2020–2022) சபா மக்கள் கூட்டணி (செப்டம்பர் 2020) ஒற்றுமை அரசாங்கம் (நவம்பர் 2022) |
நிறங்கள் | மஞ்சள், பச்சை, வெளிர் நீலம் |
மலேசிய மேலவை: | 0 / 70 |
மலேசிய மக்களவை: | 1 / 26 |
சபா மாநில சட்டமன்றம்: | 0 / 79 |
இணையதளம் | |
Facebook PBRS |
இதற்கு முன்னர் 1994 முதல் 2023 வரை, இந்தக் கட்சி அதன் நிறுவனர் மற்றும் அதன் முதல் தலைவரான ஜோசப் குருப் (Joseph Kurup) என்பவரால் வழிநடத்தப்பட்டது. இந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக 1994 முதல் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது. 2018 முதல் 2020 வரையிலான ஒரு குறுகிய காலத்திற்கு பாரிசான் நேசனல் கூட்டணியில் இருந்து விலகி இருந்தது.
11 மார்ச் 1994 அன்று, ஐக்கிய சபா கட்சியின் (United Sabah Party (PBS) உறுப்பினர்கள் சிலரைக் கொண்டு ஜோசப் குருப் என்பவரால் சபா ஐக்கிய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டது. 10 சூன் 1994 அன்று, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றாக இந்தக் கட்சி ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1]
2018 மலேசிய பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணி வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் இருந்து சபா ஐக்கிய மக்கள் கட்சி வெளியேற முடிவு செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஜோசப் குருப் கூறினார். பின்னர், புதிய ஆளும் பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியில் சேர விண்ணப்பித்தது.[2][3] இருப்பினும் அந்த விண்ணப்பம் பின்னர் புறக்கணிக்கப்பட்டது.[4]
மார்ச் 2020-இல் ஏற்பட்ட, மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022யின் காரணமாக மலேசியாவின் ஆளும் கட்சியாக இருந்த பாக்காத்தான் அரப்பான் கூட்டணி வீழ்ச்சி அடைந்தது. அதைத் தொடர்ந்து, பாரிசான் நேசனல் கூட்டணியில் இந்த சபா ஐக்கிய மக்கள் கட்சி மீண்டும் இணைந்து கொண்டது.[5][6] அப்போது இருந்து இந்தக் கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இயங்கி வருகிறது.[7][8]
மலேசிய மக்களவையில் இந்தக் கட்சிக்கு ஓர் இடம் மட்டுமே உள்ளது.
மாநிலம் | #. | தொகுதி | உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|---|---|
சபா | P182 | பென்சியாங்கான் | ஆர்தர் ஜோசப் குருப் | PBRS | ||
மொத்தம் | சபா (1) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.