சன் டூங் குகை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சன் டூங் குகை, (Son Doong Cave) (வியட்நாமியம்: Hang Sơn Đoòng); வியட்நாம் நாட்டின் மலைத்தொடர்களில் இயற்கையாகவே அமைந்த உலகின் மிகப் பெரிய சுண்ணாம்புக்கல் புற்றுப்பாறை குகையாகும்.[1][2] இது 5 கிலோ மீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும் கொண்ட 150 தனித்தனி குகைகளின் தொடராகும்.[3] இக்குகைகள் போங் நா-கே பாங் தேசியப் பூங்காவின் இதயமாக உள்ளது.
சன் டூங் குகை | |
---|---|
சன் டூங் குகையின் காட்சி | |
அமைவிடம் | ட்ராக் குவாங் பின்க் மாகாணம், வியட்நாம் |
ஆள்கூறுகள் | 17°27′25″N 106°17′15″E |
ஆழம் | ஏறத்தாழ 150மீ / 490அடி |
நீளம் | ஏறத்தாழ 9,000 மீ / 30,000 அடி |
கண்டுபிடிப்பு | கிபி 1991, ஹோ கான்க் |
நிலவியல் | சுண்ணாம்புக் கல் |
வாயில்கள் | 2 |
இடையூறுகள் | பாதள ஆறு |
Cave survey | 2009, பிரித்தானிய குகை ஆராய்ச்சியாளர்கள் / வியட்நாமியர்கள் |
லாவோஸ் – வியட்நாம் எல்லையில் வியட்நாமின் குவாங் பின்க் மாகாணத்தில் உள்ள ட்ராக் எனுமிடத்தில் அடர்ந்த மலைக்காட்டில் இக்குகை அமைந்துள்ளது. இக்குகையை 1991ம் ஆண்டில் பிரித்தானிய குகை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தார்கள்.
ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்தக் குகை உருவானதாகக் குகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாகவே இக்குகையை மழை ஆறு என்று பொருள் கொண்ட சான் டூங் என்ற பெயர் வைத்துள்ளனர்.
குகையின் உடைந்த மேற்கூரை வழியாக வெளியே பார்த்தால் காடுகள் அடர்ந்த சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது. எனவே இப்பகுதியை ஏதோன் தோட்டம் என்று அழைக்கிறார்கள்.[4] பல நூற்றாண்டுகளாக, இங்குள்ள மணல் துகள்களின் மீது படிந்த தண்ணீர் துளிகளால், இந்தக் குகை முழுவதும் பல அழகிய படிமானங்கள் உருவாகியிருக்கின்றன. சலசலவென ஓடும் சிறிய ஆறு, திரும்பும் பக்கமெல்லாம் பச்சைப்பசேல் எனப் போர்வை போர்த்தியது போல் காணப்படும் புல்வெளிகள், அடர்ந்த மரங்கள், பேரிரைச்சலுடன் விழும் அருவிகள் என இந்தக் குகை பேரழகுடன் காணப்படுகிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு ஆண்டுகளுக்கு முன்பு சான் டூ குகை உலகின் பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது.[5]
ஆகஸ்டு 2013 முதல் இக்குகையைச் சுற்றிக் காட்ட, சுற்றுலா வரும் நபர் ஒருவருக்கு 3,000 அமெரிக்கா டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.