சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி (எசுப்பானியம்: Frente Sandinista de Liberación Nacional, ஆங்கில மொழி: Sandinista National Liberation Front) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு மக்களாட்சிசார் நிகருடைமைக் கொள்கையுள்ள அரசியல் கட்சி ஆகும்.[1][2] 19 ஜூலை 1961 ஆம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்கா, சில்வியோ மயோர்கா, தொமாஸ் போர்கே முதலானோரைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழு தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கியது.[3] இரண்டாண்டுகளுக்குப் பின் 1930 களில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அகுஸ்டோ செஸார் சாண்டினோவின் பெயர் இணைக்கப்பட்டு சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி உருவானது.
2001 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த டானியல் ஒர்ட்டேகா 876927 வாக்குகளைப் பெற்றார் (43%). 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 915417 வாக்குகளைப் (42.1%, 41 இடங்கள்) பெற்றது. 2011 ஆம் ஆண்டின் தேர்தலில் 60.85% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவா நாட்டின் அதிபரானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.