From Wikipedia, the free encyclopedia
சத்ய ஜோதி பிலிம்ஸ் என்பது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களை தயாரித்து, அவற்றை வெளியீடு செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1980 ஆம் ஆண்டு 'ஜி. தியாகராசன்' மற்றும் 'ஜி. சரவணன்' என்பவர்களால் நிறுவப்பட்டது.
வகை | திரைப்படத் தயாரிப்பும், வெளியீடும் |
---|---|
நிறுவுகை | 1977 |
நிறுவனர்(கள்) | ஜி. தியாகராசன் ஜி. சரவணன் |
தொழில்துறை | திரைப்படத்துறையும்,. தொலைக்காட்சியும் |
இணையத்தளம் | http://www.sathyajyothifilms.com/ |
எங்கள் நிறுவனம் மூலம் நாங்கள் பல்வேறு படங்களை தயாரித்து வழங்கி உள்ளோம். ஒவ்வொருக் கால கட்டத்திலும் மக்களின் ரசனைக்கு ஏற்ப, சிறந்தக் கலைஞர்களைக் கொண்டு தரமான படங்கள் வழங்கி வருவது என்பது எங்களது நிறுவனத்தாரின் கோட்பாடாக இருந்து வருகிறது
- டீ. ஜீ. தியாகராஜன்
2018 ஆம் ஆண்டு சூலை மாதம், இந்நிறுவனத்தின் 32வது திட்டவெளியீட்டை அறிவித்தது. இப்படத்திற்கான பூசை, சூலை மாதம் 6 தேதி, சென்னையில் போடப்பட்டது. அதன்படி, நடிகர் அஜித் குமார், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில், விசுவாசம் (திரைப்படம்) நடிக்கிறார்.[1] இது 'தல' என்று அழைக்கப்படும் அஜீத்தின் 57வது படமாகும்.[2][3] இப்படத்திற்கான இசையமைப்பாளர், அனிருத் ஆவார். மேலும், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் படத்தொகுப்புக்கும், இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆகியிருக்கின்றனர், இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு தமிழகத்தில் வெளியான, விவேகம் (திரைப்படம்) என்பதும், இந்த நிறுவனத்தால், இயக்குநர் சிவா இயக்கி, அஜித்குமார் நடித்தது குறிப்பிடத் தகுந்த நிகழ்வு ஆகும்.[4][5] .
சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற நிறுவனமானது, 1970 ஆம் ஆண்டு என்பவரால் டீ. ஜி. தியாகராசன் அடித்தளமிடப் பட்டது. தியாகராசன், எம்.பி. ஏ. பட்டம் பெற்று அமெரிக்காவில் வசித்து வந்தவர் ஆவார். இவரது தந்தை காலஞ்சென்ற வீனஸ் டீ. கோவிந்தராசன் ஆவார். இவரது தந்தையும், வீன்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வழியாக 1960 ஆம் ஆண்டுகளில் தொடங்கி 1980 ஆம் ஆண்டுகள் வரை, திரைப்படங்கள் தயாரித்தார். தொடகத்தில் 1970 ஆம் ஆண்டுகளில், தியாகராசன் சத்யா மூவிஸ் நிறுவனத்தில், திரைப்படம் தயாரிப்புப் பிரிவில் பணியாற்றினார். தமிழக அமைச்சருள் ஒருவராய் இருந்த இராம. வீரப்பன் அவர்களின் பட நிறுவனமான சத்யா மூவிஸ் என்பதும், இராம. வீரப்பன் இவரது மாமனார் (மனைவியின் தந்தை) என்பது குறிப்பிடத் தகுந்த சமூக அடையாளம் ஆகும்.[6][7] இத்தகைய அனுபவங்களும், கற்றல்களும், இந்திறுவனத்தினை, தொடர் வெற்றிப் பாதையில் இட்டு செல்வாதாகக் கொள்ளலாம்.
கீழ்கண்ட தமிழ் நாடகத்தொடர்களை இந்நிறுவனம் எடுத்து ஒளிபரப்பியது. அடைப்புக்குறிகளுக்குள் இருக்கும் ஆண்டு, அந்தக் குறிப்பிட்டத் தொடர் ஒளிபரப்புத் தொடங்கிய ஆண்டினைக் குறிக்கிறது.
ஆண்டு | தலைப்பு | அலைவரிசை |
---|---|---|
1999 | ஜெயிப்பது நிஜம் | சன் தொலைக்காட்சி |
2001-2002 | கோபுரம் | |
2002-2003 | வரம் | |
2003-2009 | ஆனந்தம் | |
2009 | கல்யாணம் | |
2009-2012 | இதயம் | |
2012 | ஆண் பாவம் | |
2012-2014 | புகுந்த வீடு | ஜீ தமிழ் |
2012-2014 | மாயா | ஜெயா தொலைக்காட்சி |
2015-2016 | அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் | ஜீ தமிழ் |
2017-2019 | சுமங்கலி | சன் தொலைக்காட்சி |
2020-ஒளிபரப்பில் | திருமகள் | |
இத்தொடரானது, 2003-2009 என ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகியது. இதில் நடித்தவர்கள் : சுகன்யா, கமலேஷ், ஜானவி, சதீஷ், டெல்லி குமார் மற்றும் பலர். இயக்கம்: நித்யானந்தம். கதை :இராதாகிருஷ்ணன் என்பவர் புகழ் பெற்ற தொழில் அதிபர் ஆவார். இவரை ஆர்கே (RK) என அனைவரும் அழைப்பர். அவருக்கு பிறந்தவர் நால்வர். இந்த நான்கு பிள்ளைகளாலும், அவர் படும் இன்னல்களையும், வாழ்நிலைச் சூழல்களையும், இந்நாடகம் அழகுற வடிக்கிறது. அந்த நான்கு வாரிசுகளில், இரண்டாவது மகனான கார்த்திக்கை, சாந்தி என்ற விதைவைப் பெண், திருமணம் செய்து கொள்கிறார்i. அதற்காக அவள் சந்திக்கும் அவமானங்களும், அல்லல்களும் அழகுற எடுத்துக் காட்டப்படுகின்றன. அந்த விதவைக்கு ஒரு குழந்தையும் உண்டு. இப்போராட்டங்களுக்கு அடிப்படை, கார்த்தியின் அண்ணியான அபிராமி ஆவாள். ஏனெனில், அவள் தனது தங்கையை, கார்த்திக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணுகிறாள். அபிராமியின் தந்தை, ஆர்கேவின் தொழில் திறமையால் பின்னுக்குத் தள்ளப்பட்டதாக, அபிராமி எண்ணுகிறாள். இப்படியாக வீட்டுக்குள்ளேயே நடைபெறும் உட்பூசல்களையும், அவை இறுதியில் சீராகி, ஆர்கே குடும்பமத்தில் ஆனந்தம் பொங்குகிறது. கதை, வசனம்: தேவி பாலா.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.