From Wikipedia, the free encyclopedia
சஞ்சயன் (Sanjaya or Sanjay) (சமசுகிருதம்:सञ्जय) மகாபாரதம் காவியத்தில் மன்னர் திருதராட்டிரனின் தேரோட்டியும், ஆலோசகரும் ஆவார். இவர் சூதர் மரபினர் ஆவார்/[1] சஞ்சயனுக்கு வேதவியாசர் அருளிய தெய்வீகப் பார்வையைக் கொண்டு, பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை மன்னர் திருதராட்டிரனுக்கு உடனுக்குடன் உரைத்துக் கொண்டே இருப்பார்.[2] குருச்சேத்திரப் போர்க்களத்தில் தன் மகன்கள் இறந்த செய்திகளைக் கேட்டு மன்னர் திருதராஷ்டிரன் துயரம் அடைந்த போது, சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு ஆறுதல் கூறுவது வழக்கம்.
சஞ்சயன் (மகாபாரதம்) | |
---|---|
குருச்சேத்திரப் போர் நிகழ்வுகளை ஞானக்கண்ணால் கண்டு மன்னர் திருதராட்டிரனுக்கு விளக்கும் சஞ்சயன் | |
Information | |
பால் | ஆண் |
தொழில் | தேரோட்டி மன்னரின் ஆலோசகர் |
மன்னர் திருதராட்டிரன் கட்டளைப்படி குருச்சேத்திரப் போரை நிறுத்தக் கோரி சஞ்சயனை பாண்டவர்களிடம் தூது சென்றார்.[3][4]
போரில் வென்ற பாண்டவர்கள் முடிசூடிக் கொண்ட பின்னர், சில காலம் கழித்து திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரன் ஆகியோர் வனவாசம் செல்லும் போது, சஞ்சயனும் அவர்களுடன் வனத்திற்கு பயணித்தான்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.