![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Shankaragaurishvara_temple.jpg/640px-Shankaragaurishvara_temple.jpg&w=640&q=50)
சங்கர கௌரீசுவரர் கோயில்
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இந்துக் கோயில் / From Wikipedia, the free encyclopedia
சங்கரகௌரீசுவரர் கோயில் (Shankaragaurishvara Temple) என்பது இந்துக் கடவுளான சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இது இந்தியாவின் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியிலுள்ள பாரமுல்லாவுக்கு அருகிலுள்ள பட்டான் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சங்கர கௌரீசுவரர் கோயில், அமைவிடம் ...
சங்கர கௌரீசுவரர் கோயில் | |
---|---|
![]() சங்கர கௌரீசுவரர் கோயில் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஜம்மு காஷ்மீர் |
அமைவு: | பட்டான், பாரமுல்லா மாவ்டடம், ஜம்மு காஷ்மீர் |
ஆள்கூறுகள்: | 34.101°N 74.562°E / 34.101; 74.562 |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | காஷ்மீரக் கட்டிடக்கலை |
வரலாறு | |
அமைத்தவர்: | சங்கரவர்மன் |
மூடு
பொ.ச.883-க்கும் 902-க்கும் இடையில் ஆண்ட காஷ்மீரின் சங்கரவர்மன் என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது.[1] கோவில் சிதிலமடைந்த நிலையில், பூசைகள் நடத்தப்படுவதில்லை. இது சங்கராச்சாரியார் கோயிலைப் போன்ற பாணியில் கட்டப்பட்டுள்ளது.[2] ஜம்மு -காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் 15க்கும் மேற்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.[3]