From Wikipedia, the free encyclopedia
கணினி அறிவியல் கழகம் (Computer Sciences Corporation, CSC) என்பது ஐக்கிய அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பன்னாட்டுத் தகவல் தொழிநுட்ப நிறுவனம் ஆகும். இது அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஃபால்சு சர்ச் என்ற இடத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இது தோராயமாக 70 நாடுகளில் 90000 பணியாளர்களை கொண்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அமெரிக்க கூட்டரசு மற்றும் அமெரிக்க அல்லாத அரசு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிறுவங்கள் பட்டியலான பார்ச்சுன் 500 பட்டியலில் 2012 படி 162 இடத்தை பெற்றுள்ளது
வகை | பொது நிறுவனம் |
---|---|
நிறுவுகை | ஏப்ரல் 1959 |
நிறுவனர்(கள்) | ராய் நட் பிளெட்சர் ஆர். ஜோன்சு பாப் பாட்ரிக் |
தலைமையகம் | பால்ஸ் சர்ச், வர்ஜீனியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
சேவை வழங்கும் பகுதி | உலகளாவியது |
முதன்மை நபர்கள் | ஜான் லோரி, தலைவர், முதன்மை செயல் அதிகாரி[1] |
தொழில்துறை | தகவல் தொழினுட்பம் |
சேவைகள் | தகவல் தொழில்நுட்பம், வணிக ஆலோசனை, ஒப்பந்த சேவை அமர்த்தம் |
வருமானம் | ▼ US$ 15.877 பில்லியன் (2012)[2] |
இயக்க வருமானம் | ▼ US$ -4.347 பில். (2012)[2] |
நிகர வருமானம் | ▼ US$ -4.242 பில். (2012)[2] |
மொத்தச் சொத்துகள் | ▼ US$ 11.189 பில். (2012)[2] |
மொத்த பங்குத்தொகை | ▼ US$ 2.779 பில். (2012)[2] |
பணியாளர் | 96,000 (2012)[3] |
துணை நிறுவனங்கள் | CSC இந்தியா, Computer Sciences Raytheon |
இணையத்தளம் | www |
கணினி அறிவியல் கழகம் 1959 ஆண்டு ஏப்ரல் மாதம் ராய் நட், பிலெட்ச்சர் ஜோன்சு மற்றும் பாப் பாட்ரிக் ஆகிய மூவரால் துவங்கப்பட்டது. 1963 ஆண்டு வாக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது.இவர்களது இலக்கு நிரலாக்க கருவிகளான தொகுப்பி (Assembler) மற்றும் மொழிமாற்றியை (Compiler) அளிப்பதே ஆகும்.
மிகப்பெரிய நிறுவனமான சிஎசி உலகின் 500 பெரிய நிறுவனங்கள் பட்டியலில் 162 இடத்தைப் பெற்று திகழ்கிறது. 1968 ஆம் ஆண்டு இறுதியில் சிஎசி நியூயார்க் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைத்தது. மேலும் கனடா, இந்தியா, செருமனி, எசுப்பானியா, இத்தாலி, பிரேசில், ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பரவியது.
கணினி அறிவியல் கழகம் தனது சேவைகளை பின்வரும் மூன்று சேவை பிரிவுகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
கணினி அறிவியல் கழகம் பல நிறுவனங்களை கையகபடுதியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.