![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Letter_Goldbach-Euler.jpg/640px-Letter_Goldbach-Euler.jpg&w=640&q=50)
கோல்டுபேக்கின் அனுமானம்
From Wikipedia, the free encyclopedia
கோல்டுபேக்கின் அனுமானம் (Goldbach's conjecture) என்பது கணிதத்தின் எண்கோட்பாட்டிலுள்ள மிகப்பழமை வாய்ந்ததும் நன்கு அறியப்பட்டதுமான தீர்க்கப்படாத சிக்கல்களில் ஒன்றாகும். இந்த அனுமானத்தின்படி, இரண்டைவிடப் பெரியதாகவுள்ள ஒவ்வொரு இரட்டை இயல் எண்ணையும் இரு பகா எண்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்.
விரைவான உண்மைகள் புலம், யூகித்தவர் ...
![]() கோல்டுபேக், ஆய்லருக்கு எழுதிய கடிதம் (ஜூன் 7, 1742; இலத்தீன்-செருமானியம்)[1] | |
புலம் | எண் கோட்பாடு |
---|---|
யூகித்தவர் | கிறிஸ்டியன் கோல்டுபேக் |
யூகிக்கப்பட்டது | 1742 |
திறந்த சிக்கல் | ஆம் |
விளைவுகள் | கோல்டுபேக்கின் வலுவற்ற அனுமானம் |
மூடு
4×1018 க்குக் குறைவான அனைத்து முழுஎண்களுக்கும் இக்கூற்று உண்மையெனக் காட்டப்பட்டிருந்தாலும் இன்னமும் நிறுவப்படாமலேதான் இருக்கிறது.[2]