![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/Kuala_Berang_-_simpang.jpg/640px-Kuala_Berang_-_simpang.jpg&w=640&q=50)
கோலா பேராங்
From Wikipedia, the free encyclopedia
கோலா பேராங்; (ஆங்கிலம்: Kuala Berang; மலாய்: Kuala Berang) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், உலு திராங்கானு மாவட்டத்தின் (Hulu Terengganu District) தலைநகரம் ஆகும். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 40 கி.மீ. கி.மீ. (25 மைல்) தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் கோலா பேராங், நாடு ...
கோலா பேராங் | |
---|---|
Kuala Berang | |
![]() | |
![]() கென்யிர் ஏரிக்கு செல்லும் பாதையில் கோலா பேராங் | |
![]() | |
ஆள்கூறுகள்: 5°04′N 103°01′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
தொகுதி | கோலா பேராங் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 18,764 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 21700 |
தொலைபேசி | +6-09 681 |
போக்குவரத்து எண் | T |
மூடு
இந்த நகரம் கென்யிர் ஏரியின் (Lake Kenyir) நுழைவாயிலாகச் செயல்படுகிறது. அத்துடன் 1899-ஆம் ஆண்டில் இந்த நகருக்கு அருகில்தான் வரலாற்றுப் புகழ் திராங்கானு கல்வெட்டு (Terengganu Inscription Stone) கண்டுபிடிக்கப்பட்டது.[1]
திராங்கானு சுல்தானகத்தின் தலைநகரமாக கோலா திராங்கானு அமைவதற்கு முன்னர்; கோலா பெராங் நகரம் தான் திராங்கானு மாநிலத்தின் முதல் தலைநகரமாக இருந்தது.[2]