கோதாவரி பாலம்
From Wikipedia, the free encyclopedia
கோதாவரி பாலம் அல்லது கோவ்வூர்–இராஜமுந்திரி பாலம் இந்தியாவில், இராஜமுந்திரி என்ற இடத்தில் கோதாவரி ஆற்றில் உள்ள வளைவான பாலமாகும். இது ஆசியாவின் மூன்றாவது நீளமான, ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்ட சாலை-இரயில் பாலம் ஆகும். இது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் உள்ள திக்ஹா–சோன்புர் இரயில்–சாலை பாலம் மற்றும் கன்சாய் சர்வதேச விமான நிலையம், ஒசாகாவில் உள்ள வான வாசல் பாலம் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக வருகிறது. இது கோதாவரி ஆற்றில் இராஜமுந்திரிக்கு அருகில் உள்ள மூன்று பாலங்களில் இரண்டாவது பாலமாகும். இந்த ஹேவ்லாக் பாலம் 1897ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பாலமாகும். தனது முழு பயன்பாட்டையும் தந்து விட்ட காரணத்தால் இந்தப் பாலமானது 1997 ஆம் ஆண்டு திரும்பப் பெறப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கோதாவரி வளைவுப் பாலமானது ஒரு வில்நாண் உத்திர வகைப் பாலமாகும். 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பாலமானது தற்போது வரை உபயோகத்தில் உள்ளது.
கோதாவரி பாலம் | |
---|---|
கோதாவரி ஆற்றின் குறுக்கேயான கோதாவரி பாலம் | |
ஆள்கூற்று | 16°59′52″N 81°45′21″E |
வாகன வகை/வழிகள் | இரண்டு சாலை மற்றும் ஒரு இரயில் பாதை |
கடப்பது | கோதாவரி ஆறு |
இடம் | இராஜமுந்திரி |
Other name(s) | இராஜமுந்திரி–கோவ்வூர் பாலம் |
Preceded by | ஹேவ்லாக் பாலம் |
Followed by | கோதாவரி வளைவு பாலம் |
Characteristics | |
வடிவமைப்பு | வளைவு பாலம் |
மொத்த நீளம் | 4.1 கிமீ |
அதிகூடிய தாவகலம் | 91.5 மீ |
தாவகல எண்ணிக்கை | 27 |
History | |
Engineering design by | பிரைத்வைட், பர்ன் & ஜெசாப் கட்டுமான நிறுவனம் |
திறக்கப்பட்ட நாள் | ஆகத்து 16, 1974 |
இந்தப் பாலமானது 4.1 கிலோமீட்டர் நீளமுடையது (சாலைப் பகுதி 4.1 கி.மீ - தண்டவாளப் பகுதி 2.8 கி.மீ) 91.5 மீ வீச்சளவுள்ள 27 வளைவுகள் மற்றும் 45.72 மீ வீச்சளவுள்ள 7 வளைவுகள் (இவற்றில் 45.72 மீட்டர் வீச்சளவுள்ள 6 வளைவுகள் 6 பாகை அளவு இராஜமுந்திரி முனையருகே வளைந்துள்ளது) இந்தப் பாலமானது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கிராப்டன் பாலத்தைப் போன்று இரயில் பாதைக்கு மேலாக சாலைப்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலமானது கோதாவரி வளைவுப் பாலத்தோடு கூடுதலாக இராஜமுந்திரியின் கலை, கலாச்சாரத்தைக் குறிக்கும் சின்னமாக விளங்குகிறது. இந்தப் பாலம் இராஜமுந்திரியின் அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. [1]