கோக்கோ தீவுகள்
தீவுக் கூட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோக்கோ தீவுகள் (Coco Islands, கொக்கோ தீவுகள், பர்மியம்: ကိုကိုးကျွန်း) என்பது வங்காள விரிகுடாவின் வடகிழக்கே அமைந்துள்ள சிறிய தீவுக்கூட்டம் ஆகும். இவை மியான்மரின் யங்கோன் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். இத்தீவுகள் யங்கோன் நகரில் இருந்து தெற்கே 414 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. கொக்கோத் தீவுக் கூட்டத்தில் 5 தீவுகள் உள்ளன. இவற்றில் நான்கு தீவுகள் பெரும் கோக்கோ கடலடிப்பாறையிலும், மற்றைய தனிமைப்படுத்தப்பட்ட தீவு சிறிய கோக்கோ கடலடிப்பாறையிலும் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தின் வடக்கே பிரெப்பாரிசு என்ற மியன்மாரின் இன்னும் ஒரு தீவு உள்ளது. தெற்கே இந்தியாவுக்குச் சொந்தமான கரைசேர் தீவு காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: Coco Islandsကိုကိုးကျွန်း, புவியியல் ...
உள்ளூர் பெயர்: Coco Islands ကိုကိုးကျွန်း | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 14.05°N 93.35°E / 14.05; 93.35 |
தீவுக்கூட்டம் | கோக்கோத் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | அந்தமான் கடல் |
மொத்தத் தீவுகள் | 7 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 20.54 km2 (7.93 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 112 m (367 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 950 |
அடர்த்தி | 46.25 /km2 (119.79 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
ISO குறியீடு | MM-06 |
மூடு