பறவைப் பேரினம் From Wikipedia, the free encyclopedia
அமெரிக்கக் (வட மற்றும் தென்) கொம்பு ஆந்தைகள் மற்றும் பழைய உலகக் கழுகு ஆந்தைகள் புபோ (Bubo) பேரினத்தின் கீழ் வருகின்றன. புபோ என்ற இலத்தீன் வார்த்தை ஐரோவாசியக் கழுகு ஆந்தையைக் குறிப்பதாகும்.
கொம்பு ஆந்தைகள் மற்றும் கழுகு ஆந்தைகள் புதைப்படிவ காலம்:பின் பிலியோசீன்-தற்காலம் | |
---|---|
இந்தியக் கழுகு ஆந்தை, Bubo bengalensis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனங்கள் | |
ஒன்று அல்லது இரண்டு டசன் | |
வேறு பெயர்கள் | |
Huhua |
இந்தப் பேரினத்தில் ஒன்று அல்லது இரண்டு டசன் உண்மையான ஆந்தைகள் (ஸ்ட்ரிஜிடே குடும்பம்) வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. ஸ்ட்ரிஜிபார்மஸ் வரிசையின் உயிர்வாழும் பெரிய ஆந்தைகளில் சில இப்பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக கொம்பு போன்ற இறகுகள் உள்ள ஆந்தைகள் மட்டுமே இப்பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டன, ஆனால் அத்தகைய விதிகள் தற்போது பின்பற்றப்படுவதில்லை.
மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. சைட்டோக்ரோம் பி வரிசை தகவல்கள் ஆர்க்டிக் நிலைமைகளுக்கு ஏற்பத் தகவமைந்த ஒரு கழுகு-ஆந்தை தான் பனி ஆந்தை என எண்ணுவதற்கான முடிவுக்கு வலுச்சேர்க்கின்றன. அவ்வாந்தையை புபோ பேரினத்திற்கு மாற்றுவதற்கும் வலுச்சேர்க்கின்றன. எனவே ஒரே ஒரு உயிரினத்தைக் கொண்ட பேரினமான நைக்டியா தவறாகிறது.[4]
முன்னர் கெடுபா என்ற பேரினத்தில் இருந்த நான்கு மீன்-ஆந்தைகள் தற்காலிகமாக புபோ பேரினத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[5] எனினும், மைட்டோகாண்ட்ரியா டி.என்.ஏ. சைட்டோக்ரோம் பி தகவல்களின் படி புபோ பேரினத்தை மோனோபைலெடிக் ஆக்க ஸ்கோடோபேலியா மீன் ஆந்தைகளும் இதனுள் கொண்டுவரப்பட வேண்டும். மறுபுறம், இப்பேரினம் பின்னர் மிகப் பெரியதானதாக மற்றும் தவறானதாக வரையறுக்கப்படுகிறது. புபோ விரிவாக்கப்படும்போது இரண்டு தனித்தனி கிளைகள் உள்ளன. ஒருசில அசாதாரண கழுகு-ஆந்தைகள் – குறைந்தது பட்டை, புள்ளிவயிற்று மற்றும் உசம்பர கழுகு-ஆந்தைகள், ஒருவேளை ஃப்ரேசரின் கழுகு-ஆந்தை கூட மற்றும் மற்றவையும் – கெடுபா பேரினத்திற்கு நகர்த்தப்பட்டால் மீன் மற்றும் மீன் பிடிக்கும் ஆந்தைகள் கெடுபா பேரினத்தில் ஐக்கியப்படுத்தப்படலாம். சில புதிரான கழுகு-ஆந்தைகள் ஆய்வுசெய்யப்படாததாலும் மற்றும் பிற – உதாரணமாக வெரியக்சின் கழுகு-ஆந்தை – தீர்க்கமான உறவுகளைக் கொண்டிருக்காததாலும் இன்னும் அதிகமான ஆய்வு தேவைப்படுகிறது.[4]
பின்வரும் வாழும் ஆந்தைகள் வழக்கமாக புபோ பேரினத்தின் கீழ் வருகின்றன:
சில நேரங்களில் இந்தப் பேரினத்தின் கீழ் வருபவை:
பெயரிடப்பட்ட மற்றும் தனித்துவமான புபோ இனங்கள் பின்வருமாறு:
வரலாற்றுக்கு முந்தைய கொம்பு ஆந்தைகளின் சில குறிப்பிடத்தக்க விவரிக்கப்படாத, பொதுவாக மிகவும் துண்டு துண்டாக உள்ள படிமங்களும், பதிவு செய்யப்பட்டுள்ளன:
மாதிரி UMMP V31030, ஒரு பின் பிலெய்ஸ்டோசின் காக்கையலகுருவெலும்பு, ரெக்ஸ்ரோட் உருவாக்கம், கான்சாஸ் (ஐக்கிய அமெரிக்கா). புபோவா அல்லது ஸ்ட்ரைக்ஸ்ஆ எதன் கீழ் என்று முடிவெடுக்கப்படவில்லை. இந்தப் புதைபடிவம், பெரிய கொம்பு ஆந்தை (B. virginianus) அல்லது பெரிய சாம்பல் ஆந்தையை (S. nebulosa) ஒத்த அளவுடையது.[10]
சிங்க்லைர் ஆந்தை (Bubo sinclairi), பின் பிலெய்ஸ்டோசின், கலிபோர்னியா. பெரிய கொம்பு ஆந்தையின் பாலியோ துணையினமாக இருக்கலாம்.[11] தோராயமாக சமகாலத்திய மத்திய மற்றும் கிழக்கு மத்தியதரைக்கடல் பகுதியின்புபோ இன்சுலரிஸ் ஆனது பழுப்பு மீன் ஆந்தை பாலியோ துணையினத்தின் ஒரு இளைய ஒத்த பெயராகக் கருதப்படுகிறது.[12]
பல்வேறு புபோ புதைபடிவங்களாகக் கருதப்பட்ட புதைபடிவங்கள் கடைசியில் வெவ்வேறு பறவைகளிலிருந்து வந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பின் இயோசின்/ஆரம்ப ஒலிகோசினின் காது ஆந்தைகளான "புபோ" இன்செர்டஸ் மற்றும் "புபோ" அர்வெர்னென்ஸிஸ் ஆகியவை தற்போது முறையே பார்ன் ஆந்தைப் பேரினமான நோக்டர்னவிஸ் மற்றும் நெக்ரோபையஸ் இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. "புபோ" லெப்டோஸ்டியஸ் தற்போது மினெர்வா (முந்தைய ப்ரோடோஸ்ட்ரிக்ஸ்) பேரினத்தின் கீழ் பழங்கால ஆந்தை என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பின் ஒலிகோசின் அல்லது ஆரம்ப மியோசினின்"புபோ" போயிரெயிரி (செயின்ட் ஜெரார்ட் லி புய், பிரான்ஸ்) தற்போது மியோக்லவுக்ஸ் இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மற்றொரு புறம், பிலவ்-ரிப்பேர்ஸ்ரோடாவில் (செர்மனி) கிடைத்த பின் பிலியோசின் காலத்தைச் சேர்ந்த ஒரு ஹெரானின் புதைபடிவம் என்று கருதப்பட்ட "அர்டியா" லிக்னிடம் ஒரு ஆந்தையினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அது புபோ உடன் நெருக்கமானது அல்லது அவை இங்கு வகைப்படுத்தக்கூடியவையாக இருக்கலாம். சுமார் 2 மில்லியன் வயதுடைய அது பொதுவாக ஐரோவாசியக் கழுகு ஆந்தையாக வகைப்படுத்தப்படலாம்.[13]
இவற்றின் இரவு உணவுப் பழக்கம் காரணமாக, பெரும்பாலான ஆந்தைகள் நேரடியாக மனிதர்களுடன் ஒரு பெரிய அளவிற்கு தொடர்பு கொள்வதில்லை. இருந்தும் இவை பல எலிகள் மற்றும் பிற பூச்சிகளை பிடிக்கின்றன. எனினும், 2015 ஆம் ஆண்டில், நெதர்லாந்தில் உள்ள பர்மெரென்டில் ஒரு கழுகு ஆந்தை சுமார் ஐம்பது மனிதர்களைத் தாக்கியது. பின்னர் ஒரு வல்லூறு வைத்திருப்பவரால் அது பிடிக்கப்பட்டது.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.