இந்தோனேசியாவிற் காணப்படும் பெரும் பல்லியினம் From Wikipedia, the free encyclopedia
கொமோடோ டிராகன் (வாரனஸ் கொமோடோயென்சிஸ்)[2] அல்லது கொமோடோ உடும்பு என்பது இந்தோனேசிய நாட்டில் உள்ள கொமோடோ, ரிங்கா, ஃப்ளோர்ஸ், கிலி மோட்டாங் மற்றும் பாடர் ஆகிய தீவுகளில் பெருமளவு காணப்படும் ஒரு உயிரினம் ஆகும். வரானிடே என்ற உடும்பு குடும்பத்தில் அடங்கும் இது உலகின் மிகப்பெரிய பல்லி வகை ஆகும். அரிதான சந்தர்ப்பங்களில் அதிகபட்சமாக 3 மீட்டர் (10 அடி) வளர்ந்து, சுமார் 70 கிலோகிராம் (150 பவுண்டு) எடையுடன் இருக்கும்.
கொமோடோ டிராகன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | உடும்பு வகையி |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | |
இனம்: | கொமோடோ உடும்பு |
இருசொற் பெயரீடு | |
Varanus komodiensis பீட்டர் ஓவன்சு, 1912[1] | |
Komodo dragon distribution |
கொமோடோ டிராகன்கள் பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றைப் பதுங்கியிருந்து வேட்டையாடுகின்றன. பெரிய கோமோடோ டிராகன்களின் முக்கியமான உணவு டிமோர் என்ற ஒருவகை மான் ஆகும். ஆனால் அவை கணிசமான அளவு விலங்குகளின் பிணங்களையே சாப்பிடுகின்றன. அவை சில சமயங்களில் மனிதர்களையும் தாக்குவது உண்டு.
மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் உறவு கொள்ளும் கொமடோ டிராகன்கள் செப்டம்பர் மாதம் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளை ஏழு முதல் எட்டு மாதங்கள் வரை அடைத்து வைக்கின்றன, ஏப்ரல் மாதத்தில் பூச்சிகள் அதிக அளவில் அதிக அளவில் இருக்கும் போது அவை பொரிக்கின்றன. இளம் கொமோடோ டிராகன்கள் வலுவற்றதாக இருப்பதால் மரங்களில் ஏறி வேட்டையாடுபவர்களிடமிருந்தும், விலங்குகளிடமிருந்தும் பாதுகாப்பாக உள்ளன. அவை 8 முதல் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகின்றன. கொமோடோ டிராகனின் ஆயுட்காலம் தோராயமாக 30 ஆண்டுகள் ஆகும்.
மனிதர்களின் செயல்களால் காடுகளில் கொமோடோ டிராகனின் அளவு குறைந்து வருகிறது. மேலும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம்(IUCN) அழிவாய்ப்பு இனம் என்ற பட்டியலில் கொமோடோ டிராகன்களைச் சேர்த்துள்ளது. இதனால் அவை இந்தோனேசிய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் கொமோடோ தேசிய பூங்கா நிறுவி அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு இந்தோனேசிய அரசு உதவி செய்தது.
வயது முதிர்ந்த கொமோடோ டிராகன் வழக்கமாக சுமார் 70 கிலோ (150 பவுண்டு) எடையுள்ளதாக இருக்கிறது. ஆயினும் சிறைப்பிடிக்கப்பட்ட மாதிரிகள் பெரும்பாலும் அதிகமாக எடையைக் கொண்டிருக்கின்றன. கின்னஸ் உலக சாதனைகள் குறிப்பின்படி சராசரியாக வயதுவந்த ஆண் கொமோடோ உடும்பு 79 முதல் 91 கிலோ எடையும், 2.59 மீ (8.5 அடி) அளவும், சராசரியாக பெண் கொமோடோ உடும்பு 68 முதல் 73 கிலோ எடையும் மீ (7.5 அடி) அளவும் கொண்டிருக்கும்.
கொமடோ உடும்பின் வால் அதன் உடல் அளவிற்கு நீளமாக இருக்கும். அதன் ரம்பம் போன்ற 60 பற்களின் நீளம் 2.5 செமீ (1 அங்குலம்) வரை இருக்கும். ஈறு திசுக்கள் பற்களின் பெரும்பகுதியை மூடியிருப்பதால் அதன் பற்கள் இரத்தச் சாயத்துடன் காட்சியளிக்கும். கொமோடோ உடும்பு ஆழமாகப் பிளவுபட்ட நீளமான மஞ்சள் நிற நாக்கைக் கொண்டுள்ளது. இதன் வலிமையான செதில்களால் ஆன தோல் ஒரு இயற்கையான ஒரு வலைக்கவசம் போல அமைந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.