கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ்
From Wikipedia, the free encyclopedia
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் (Konstantin Sergeevich Novoselov, இரசிய மொழி: Константи́н Серге́евич Новосёлов, கொன்ஸ்டண்டீன் செர்கேவிச் நவசியோலொவ், பிறப்பு: ஆகத்து 23, 1974) உருசியாவில் பிறந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இயற்பியல் அறிவியலாளர். ஒற்றையணு தடிப்புள்ள கரிம அணுப் படலத்தை பற்றிய இவருடைய ஆய்வு புகழ்பெற்றது. ஆந்தரே கெய்ம் என்பாருடன் சேர்ந்து இவருக்கு 2010 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது[1]. நோவொசியெலோவ் தற்பொழுது மான்ச்செசிட்டர் பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ ஒருசில அணுவளவுத் தடிப்புள்ள பொருள்களைப் பற்றி ஆயும், இடையளவு இயற்பியல் (Mesoscopic physics, மேசோசுக்கோப்பிக் இயற்பியல்) என்னும் துறையில் (பிரித்தானிய) வேந்தியக் குமுக ஆய்வுப் பேராளராகப் (Royal Society Research Fellow) பணிபுரிகிறார்[2][3].
விரைவான உண்மைகள் கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ்Konstantin Novoselov., பிறப்பு ...
கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் Konstantin Novoselov. | |
---|---|
பிறப்பு | ஆகத்து 23, 1974 (1974-08-23) (அகவை 49) நிழ்சினி தாகில், உருசிய சோவியத் கூட்டிணைப்பு சோசலிசக் குடியரசு, சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | இங்கிலாந்து |
குடியுரிமை | உருசியா மற்றும் ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | உருசியா |
துறை | திண்மநிலை இயற்பியல் |
பணியிடங்கள் | மான்ச்செசிட்டர் பல்கலைக்கழகம்]] |
கல்வி கற்ற இடங்கள் | மாசுக்கோ இயற்பியல் தொழில்நுட்ப உயர்கல்விக்கூடம் நீமேகென் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | யான் கீசு மான், ஆந்தரே கெய்ம் |
அறியப்படுவது | கிராபீன் (graphene) பற்றிய ஆய்வு |
விருதுகள் | இயற்பியல் நோபல் பரிசு (2010) |
மூடு