கொக்கோசு (கீலிங்) தீவுகள்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கொக்கோசு (கீலிங்) தீவுகள் (Cocos (Keeling) Islands) அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீலிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவாக நடுப்பகுதியில் அமைந்துள்ளன.
கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஆட்சிப்பகுதி | |
---|---|
கொடி | |
தலைநகரம் | மேற்குத் தீவு |
பெரிய கிராமம் | பன்டம், ஓம் தீவுகள் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (de facto) |
அரசாங்கம் | கூட்டாட்சி அரசியலமைப்பு முடியாட்சி |
• அரசி | இரண்டாம் எலிசபெத் |
• நிர்வாகி | நெலி லூகஸ் |
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதி | |
• பிரித்தானிய பேரரசோடு இணைப்பு | 1857 |
• அவுஸ்திரேலியாவுக்கு ஆட்சி மாற்றம் | 1955 |
பரப்பு | |
• மொத்தம் | 14 km2 (5.4 sq mi) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• 2004 மதிப்பிடு | 628 |
நாணயம் | அவுஸ்திரேலிய டொலர் (AUD) |
நேர வலயம் | ஒ.அ.நே+6½ |
அழைப்புக்குறி | 61 891 |
இணையக் குறி | .cc |
இந்த ஆட்சிப் பகுதியில் இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மக்கள் தொகை ஏறத்தாழ 600 ஆகும்.
இத்தீவுகள் 1622 முதல் கோக்கோசு தீவுகள் எனவும், 1703 முதல் கீலிங்கு தீவுகள் எனவும், 1805 முதல் கோக்கோசு கீலிங்கு தீவுகள் எனவும், 19-ஆம் நூற்றாண்டில் கீலிங்கு-கோக்கோசு தீவுகள் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.[1] இங்கு அதிகளவு தென்னை மரங்கள் உள்ளதால் கோக்கோசு எனப் பெயரிடப்பட்டது. 1609 இல் இத்தீவுகளை முதன் முதல் கண்ணுற்ற ஐரோப்பியரான வில்லியம் கீலிங் என்பவரின் பெயரால் இது கீலிங்கு என அழைக்கப்பட்டது.[1] 1825 இல் இங்கு வந்த ஜோன் குளூனீசு-ரொஸ் என்பவர்[2] இத்தீவுக் கூட்டத்தை போர்னியோ பவளத் தீவுகள் எனவும், வடக்கு கீலிங் தீவை கீலிங்கு எனவும், தெற்கு கீலிங்கை கோகோசு எனப் பெயரிட்டார்.[3][4] 1916 ஆம் ஆண்டு முதல் இத்தீவுகள் கோக்கோசு (கீலிங்கு) தீவுகள் என அழைக்கப்படுகிறது.[5] இப்பெயர் 1955 ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.[1]
கொக்கோசு கீலிங் தீவுகளில் வடக்கு கீலிங் தீவு, மற்றும் தெற்கு கீலிங் தீவு என இரண்டு சமதரையான தாழ்நில பவள, முருகைத் தீவுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் பரப்பளவு 14.2 சதுரகிமீ, மற்றும் கரையோர நீளம் 26 கிமீ உம் ஆகும். மிகவும் செறிந்த தென்னை மரங்களைக் கொண்டுள்ளன. வடக்கு கீலிங் தீவில் ஒரே ஒரு C-வடிவ தீவே உள்ளது. இங்கு மக்கள் வசிப்பதில்லை. தெற்கு கீலிங் தீவுகளில் 24 தனித்தனியான தீவுகள் உள்ளன. இவற்றில் மேற்குத் தீவு, ஹோம் தீவு ஆகியவற்றில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு ஆறுகளோ அல்லது ஏரிகளோ எதுவும் இல்லை. நன்னீர்த் தேக்கங்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உண்டு.
2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள் தொகை 600 இற்கும் சற்று அதிகமாகும்[6]. மேற்குத் தீவில் ஐரோப்பிய இனத்தவரும் (100), ஹோம் தீவில் உள்ளூர் மலாய் இனத்தவரும் (500) வசிக்கின்றனர். மலாய் மொழி, மற்றும் ஆங்கிலம் இங்கு அதிகமாகப் பேசப்படுகிறது. கொக்கோசுத் தீவினரில் 80 விழுக்காட்டினர் சுணி இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.