From Wikipedia, the free encyclopedia
கைடோ வான் ரோசம் (Guido van Rossum) டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கணினியில் நிரலர். இவர் பெருமளவில் பயன்படுத்தப்படும் பைத்தான்(Python) எனும் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் ஆவார். 2005-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 வரை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு ஜனவரி 2013 முதல் டிராப்பாக்ஸ்(Dropbox) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கைடோ வான் ரோசம் | |
---|---|
2006-ம் ஆண்டு ஓ'ரெல்லி கட்டற்ற மற்றும் திறமூல கருத்தரங்கில் குய்டோ வான் ரொஸ்ஸும் | |
பிறப்பு | 31 சனவரி 1956 நெதர்லாந்து |
தேசியம் | டச்சு |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் |
பணி | கணினி நிரலர், எழுத்தாளர் |
பணியகம் | டிராப்பாக்ஸ் (Dropbox)[1] |
அறியப்படுவது | பைத்தான் நிரல் மொழி |
வாழ்க்கைத் துணை | கிம் க்னப் |
பிள்ளைகள் | ஆர்லிஜ்ன் மிச்சேல் க்னப் -வான் ரொஸ்ஸூம் [2] |
வலைத்தளம் | |
python.org/~guido/ neopythonic.blogspot.com/ |
வான் ரோசம் நெதர்லாந்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து, அம்சர்டாம் பல்கலைக்கழகத்தில் 1982 ஆம் ஆண்டு கணிதம் மற்றும் கனிணியியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றார். வான் ரோசம் தன் மனைவி கிம் க்னப் ம்ற்றும் மகனுடன் உடன் கலிபோர்னியாவின் பெல்மான்ட் நகரத்தில் வசித்து வருகிறார்.
பைத்தான்(Python) எனும் நிரலாக்க மொழியை உருவாக்கிய வான் ரோசம் 1996 ல் அதன் தொடக்கத்தைப்பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:
ஆறு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1989 ல் கிருஸ்துமஸ் விடுமுறையின் போது பொழுது போக்கிற்காக ஒரு நிரலாக்க மொழித்திட்டத்தை தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அலுவலகம் ... முடியிருந்தது ஆனால் நான் வீட்டில் ஒரு கணினி வைத்திருந்தேன். ஒரு புதிய ஸ்கிரிப்டிங் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு மென்பொருள் தயார் செய்ய முடிவு செய்தேன். ABC மொழிக்கு சந்ததியான இந்த நிரலாக்க மொழி திட்டத்திற்கு பைத்தான் என பெயரிட்டேன். மான்டி பைத்தான் பிளையிங் சர்க்கஸ் என்ற நாடகத்தின் ரசிகனாக இருந்த காரணத்தினால் புதிய மொழிக்கு பைத்தான் எனப் பெயரிட்டேன்.[3]
2005 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 ஆம் ஆண்டு வரை கூகுள் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதில் அவரது கவனம் முழுவதும் பைத்தான் மொழி உருவாக்குவதில் இருந்தது.
1999 ஆம் ஆண்டு வான் ரொசம் DARPA விற்கு ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார்.Computer Programming for Everybody, அதில் அவர் பைத்தான் மொழிக்கான இலக்குகளை கூறியிருந்தார்:
2019 ஆம் ஆண்டு பைத்தான் கிட் ஹப் ( GitHub)மிக பெரிய மென் பொருள் மெலாண்மை வலைதளத்தினால் ஜாவாஸ்கிரிப்ட் அடுத்து இரண்டாவது அதிக பிரபலமான கணினி மொழியாகியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.