கே. வி. மகாதேவன்
From Wikipedia, the free encyclopedia
கே. வி. மகாதேவன் (K. V. Mahadevan) 14 மார்ச்சு 1918 – 21 சூன் 2001), ஒரு தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
விரைவான உண்மைகள் கே. வி. மகாதேவன், பின்னணித் தகவல்கள் ...
கே. வி. மகாதேவன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கிருஷ்ணன்கோயில் வெங்கடாசலம் மகாதேவன் [1] |
பிற பெயர்கள் | மாமா |
பிறப்பு | (1918-03-14)மார்ச்சு 14, 1918 |
பிறப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 21 சூன் 2001(2001-06-21) (அகவை 83) |
இசை வடிவங்கள் | திரையிசை, அரங்கு |
தொழில்(கள்) | இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1942–1992 |
மூடு