![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Homemade_Flan.jpg/640px-Homemade_Flan.jpg&w=640&q=50)
கேரமல்
From Wikipedia, the free encyclopedia
கார்மல் அல்லது கேரமல் (Caramel /ˈkærəmɛl/ அல்லது /ˈ/ˈkɑːrməl/[1][2]) என்பது பல்வேறு சர்க்கரையை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஒரு நடுத்தரம் முதல் அடர் ஆரஞ்சு நிற மிட்டாய் ஆகும். அதை களி( puddings) மற்றும் இனிப்பு போன்றவற்றிற்கு நிறமூட்டியாகப் பயன்படுத்தமுடியும், ஒரு போன்போன் மீது ஊற்றவோ, அல்லது ஐஸ்கிரீம் மற்றும் கசுடர்டு ஆகியவற்றில் இறுதியாக மேலே சேர்க்கவோ பயன்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/43/Homemade_Flan.jpg/640px-Homemade_Flan.jpg)
இதன் செயல்முறையானது சர்க்கரையை மெதுவாக 170 °C (338 °F)-க்கு வெப்பமூட்டுவதாகும். இவ்வாறு சர்க்கரை வெப்பப்படுத்தும்பொழுது, அதன் மூலக்கூறுகள் உடைந்து, மாறுபட்ட பண்பும், நிறமும், சுவையும் கொண்ட கலவைகளாக மறுவடிவமைடகிறது.