கெப்லர்-20எஃப்
From Wikipedia, the free encyclopedia
கெப்லர்-20எஃப் (Kepler-20f) என்பது கெப்லர்-20 என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள். நமது பூமியை ஒத்த பருமனை உடைய புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இக்கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பு 2011, டிசம்பர் 20 ஆம் நாள் வெளியிடப்பட்டது[1][2][3][4]. இக்கோள் கெப்லர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் ஆரையுடன் ஒப்பிடும்போது இதன் ஆரை 1.03 மடங்காகும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை 800°ப (427 °C ஆகும். தனது விண்மீனில் இருந்து 10 மில்லியன் மைல்கள் (16.1 மில்லியன் கிமீ) தூரத்தில் சுற்று வருகிறது. இத்தூரம் புதன் கோள் சூரியனைச் சுற்றி வரும் தூரத்துக்கு சமனாகும்.