From Wikipedia, the free encyclopedia
கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kepala Batas; ஆங்கிலம்: Kepala Batas Federal Constituency; சீனம்: 甲抛峇底联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P041) ஆகும்.[2]
கெப்பாலா பத்தாஸ் (P041) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Kepala Batas (P041) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | கெப்பாலா பத்தாஸ் தொகுதி |
முக்கிய நகரங்கள் | கெப்பாலா பத்தாஸ், தாசேக் குளுகோர், புக்கிட் மெர்தாஜாம் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | சித்தி மசுதுரா முகமது (Siti Mastura Mohamad) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 83,081 |
தொகுதி பரப்பளவு | 138 ச.கி.மீ[1] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
கெப்பாலா பத்தாஸ் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து கெப்பாலா பெத்தாஸ் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கெப்பாலா பத்தாஸ் தொகுதி 29 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3]
வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.
பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.
கெப்பாலா பெத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023) | |||
---|---|---|---|
செபராங் உத்தாரா தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
4-ஆவது மக்களவை | 1974-1978 | முகமது சோபி சேக் (Mohamed Sopiee Sheikh) | பாரிசான் நேசனல் ((அம்னோ) |
5-ஆவது மக்களவை | 1978-1982 | அப்துல்லா அகமது படாவி (Abdullah Ahmad Badawi) | |
6-ஆவது மக்களவை | 1982-1986 | ||
7-ஆவது மக்களவை | 1986-1990 | ||
8-ஆவது மக்களவை | 1990-1995 | ||
9-ஆவது மக்களவை | 1995-1999 | ||
10-ஆவது மக்களவை | 1999-2004 | ||
11-ஆவது மக்களவை | 2004-2008 | ||
12-ஆவது மக்களவை | 2008-2013 | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | ரீசால் மெரிக்கான் (Reezal Merican) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சித்தி மசுதுரா முகமது (Siti Mastura Mohamad ) | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 83,081 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) | 70,150 | 83.41% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) | 69,302 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) | 134 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) | 714' | - |
பெரும்பான்மை (Majority) | 2,867 | 4.13% |
வெற்றி பெற்ற கட்சி | பெரிக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Kedah |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
சித்தி மசுதுரா முகமது (Siti Mastura Mohamad) |
பெரிக்காத்தான் | 28,604 | 41.27% | +41.27 | |
ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான் (Reezal Merican Naina Merican) |
பாரிசான் | 25,737 | 37.14% | -5.80 | |
முகமது டேனியல் அப்துல் மஜீத் (Muhammad Danial Abdul Majeed) |
மூடா | 14,214 | 20.51% | +20.51 | |
அமிதி அபு அசன் (Hamidi Abu Hassan) |
உள்நாட்டு போராளிகள் கட்சி | 747 | 1.08 % | +1.08 |
நாடாளுமன்றம் | சட்டமன்றம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
கெப்பாலா பத்தாஸ் | பெர்த்தாம் | ||||||
பெனாகா | |||||||
பினாங்கு துங்கல் | |||||||
தாசேக் குளுகோர் |
எண் | தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N01 | பெனாகா (Penaga) |
முகமட் உசுனி மாட் பியா (Mohd Yusni Mat Piah) |
பெரிக்காத்தான் (பாஸ்) |
N02 | பெர்த்தாம் (Bertam) |
காலிக் மெதாப் முகமது இசாக் (Khaliq Mehtab Mohd Ishaq) |
பெரிக்காத்தான் (பெர்சத்து) |
N03 | பினாங்கு துங்கல் (Pinang Tunggal) |
அகமத் சகியுதீன் அப்துல் ரகுமான் (Ahmad Zakiyuddin Abd. Rahman) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.