கெட்டி மையம்
From Wikipedia, the free encyclopedia
கெட்டி மையம் (Getty Center), ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின அருகில் அமைந்துள்ளது. கெட்டி மைய வளாகத்தில் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லா எனும் இரண்டு அருங்காட்சியகங்கள் உள்ளது. இது ஜீன் பால் கெட்டி அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இம்மையம் 16 டிசம்பர் 1997 முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. [2] இம்மையம் கட்டிடக் கலை மற்றும் அழகிய தோட்டங்களால் நன்கறியப்பட்டுள்ளது.
Getty Center | |
கெட்டி மையத்தின் காட்சிக் கூடங்கள் | |
நிறுவப்பட்டது | 1997 |
---|---|
அமைவிடம் | லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா |
ஆள்கூற்று | 34°04′39″N 118°28′30″W |
சேகரிப்பு அளவு | ஓவியக் காட்சியகம் மற்றும் தொல்பொருட்கள் அருங்காட்சியகம் |
வருனர்களின் எண்ணிக்கை | 1,569,565 (2016)[1] |
தலைமை | ஜேம்ஸ் குனோ |
கட்டிடக்கலை நிபுணர் | ரிச்சர்டு மேயர் |
பொது போக்குவரத்து அணுகல் | ஒற்றைத் தண்டூர்தி |
வலைத்தளம் | http://www.getty.edu/art/ |
சிறு மலை மீது அமைந்த கெட்டி மையத்திற்கு செல்ல, மலையடிவாரத்தில் கார்கள் வைக்குமிடத்திலிருந்து ஒற்றைத் தண்டூர்தி சேவைகள் உள்ளது.
லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தின் பிரண்ட்வுட் பகுதியில் அமைந்த கெட்டி மையத்திலுள்ள ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் மற்றும் கெட்டி வில்லாவை பார்வையிட ஆண்டிற்கு 1.8 மில்லியன் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.
கெட்டி மையத்தின் ஜீன் கெட்டி அருங்காட்சியகத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு முந்தைய ஐரோப்பிய மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து கிடைத்த ஓவியங்கள், கல் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், அழகிய கலைப் பொருட்கள் மற்றும் 1830க்கு முந்தைய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[3][4]. மேலும் கெட்டி மையத்தின் வெளிபுறங்களில் பழங்கால சிற்பஙகளாலும், சிலைகளாலும் அழகூட்டப்பட்டுள்ளது.
மேலும் கெட்டி வளாகத்தில், கலைப்பொருட்களை ஆய்வு செய்யும் நிறுவனம் மற்றும் பாதுகாக்கும் நிறுவனம் (Getty Conservation Institute), கெட்டி அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் இயங்குகிறது. கெட்டி மையம், நிலநடுக்கங்களை தாங்கும் வகையில் வட்ட வடிவில் வடிவமைத்துக் கடடப்பட்டுள்ளது.