கூட்டரசு சாலை 4 (மலேசியா)
மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் இயங்கும் முக்கியமான கூட்டரசு சாலை / From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 4 அல்லது கூட்டரசு சாலை 4 (மலேசியா) (ஆங்கிலம்: Malaysia Federal Route 4 அல்லது Federal Route 4; மலாய்: Laluan Persekutuan Malaysia 4 அல்லது Jalan Persekutuan 4) என்பது மலேசிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் இயங்கும் முக்கியமான மலேசியக் கூட்டரசு சாலை அமைப்பாகும்.
கூட்டரசு சாலை 4 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
![]() | |
நீளம்: | 307 km (191 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1970 – present |
வரலாறு: | கட்டி முடிக்கப்பட்டது 2005 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | பட்டர்வொர்த், பினாங்கு |
![]() ![]() ![]()
![]() ![]() | |
கிழக்கு முடிவு: | பாசீர் பூத்தே, கிளாந்தான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பட்டர்வொர்த் லூனாஸ் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
307 கிலோமீட்டர்கள் (191 mi) நீளம் கொண்ட இந்தச் சாலை பினாங்கு பட்டர்வொர்த் நகரத்தையும் கிளாந்தான் பாசீர் பூத்தே நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் இந்த நெடுஞ்சாலை தாய்லாந்தின் எல்லைக்கு அருகில் சென்று புக்கிட் பூங்கா குடிநுழைவு வளாகத்தையும் (Jalan Kompleks CIQ Bukit Bunga) சந்திக்கின்றது.[1]