![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7f/Kluang02.jpg/640px-Kluang02.jpg&w=640&q=50)
குளுவாங்
From Wikipedia, the free encyclopedia
குளுவாங் (மலாய்: Kluang அல்லது Keluang; ஆங்கிலம்: Kluang; சீனம்:居銮; ஜாவி: كلواڠ) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். குளுவாங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் உள்ளது.
விரைவான உண்மைகள் குளுவாங், நாடு ...
குளுவாங் | |
---|---|
Kluang | |
![]() | |
![]() குளுவாங் நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 2°2′1″N 103°19′10″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
உருவாக்கம் | 1915 |
நகராட்சி தகுதி | 8 மே 2001 |
அரசு | |
• வகை | மலேசியாவின் உள்ளாட்சி மன்றங்கள் |
• நிர்வாகம் | குளுவாங் நகராட்சி (Kluang Municipal Council) |
• தலைவர் | அசுராவதி பிந்தி வாகித் (Azurawati Binti Wahid) |
மக்கள்தொகை (2022) | |
• மொத்தம் | 3,23,762 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 86000 |
தொலைபேசி எண் | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண் | J |
இணையதளம் | www |
மூடு
விரைவான உண்மைகள் குளுவாங் நகராட்சிKluang Municipal CouncilMajlis Perbandaran Kluang, வகை ...
குளுவாங் நகராட்சி Kluang Municipal Council Majlis Perbandaran Kluang | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 8 மே 2001 |
முன்பு | குளுவாங் மாவட்ட நகராட்சி |
தலைமை | |
நகராட்சித் தலைவர் | அசுராவதி பிந்தி வாகித் (Azurawati Binti Wahid) |
செயலாளர் | முகமது யாசித் பகாருதீன் (Mohamad Yazid Baharudin) |
குறிக்கோளுரை | |
முன்னேற்றம் செழிப்பு (Maju dan Sejahtera) (Progress and Prosper) | |
கூடும் இடம் | |
![]() | |
குளுவாங் நகராட்சி தலைமையகம் Menara MPBP, கோத்தா திங்கி சாலை, 86000 குளுவாங், ஜொகூர் | |
வலைத்தளம் | |
www |
மூடு
இந்த நகரம் ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 110 கி.மீ வடக்கே இருக்கிறது. ஜொகூர் மாநிலத்தின் மையத்தில் குளுவாங் நகரம் அமைந்துள்ளது. நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செம்பனையும் ரப்பரும் பயிர் செய்யப்பட்டு உள்ளது.
வேளாண்மைத் தொழிலே இந்தப் பகுதியின் முக்கிய தொழிலாகும். மலேசியாவில் சீனர்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களில் குளுவாங் நகரமும் ஒன்று. இங்கே தமிழர்களை அதிகமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.